Header Ads



ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சி, நாகரீகத்திற்கும், அநாகரீகத்திற்கும் இடையிலான போட்டி


ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை இன்று -01- கொழும்பில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் சில வேலைகளை செய்து வருகின்றது.

இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியிருக்கின்ற நிலையில், பல்வேறு வழிகளில் அதனை காலம் தாழ்த்த முயற்சிக்கின்றனர்.

எவ்வாறான சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டை மிக முக்கியமான ஓர் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமையும் எனவும், பலர் மூன்று தரப்பு போட்டியாக ஜனாதிபதி தேர்தலை கருதிய போதிலும் உண்மையில் நாகரீகத்திற்கும், அநாகரீகத்திற்கும் இடையிலான போட்டியாகவே இதனை கருத வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.