Header Ads



கருங்கல் குவாரியில் இரத்தின கற்கள் அடங்கிய கல்

இலங்கையில் அதிசயிக்கத்தக்க வகையில் கருங்கல் குவாரியில் இரத்தின கற்கள் அடங்கிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலங்கொட நகரை அண்மித்த பகுதியிலுள்ள கருங்கல் குவாரியில் உடைந்து வந்த பகுதி ஒன்றில் அபரேஸ் ரக 1200 இரத்தின கற்கள் ஒட்டப்பட்டிருந்த கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 12 வருடங்களாக இரத்தின கல் விற்பனையில் ஈடுபடும் ஜோர்ஜ் என்பவருக்கு இந்த இரத்தின கல் கிடைத்துள்ளது. இந்தக் கல் 456 கிராம் நிறையுடையது. மிகவும் அழகானது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக கங்கைகள் மற்றும் சுரங்கங்களிலேயே இரத்தின கற்களை மீட்க முடியும். எனினும் பாரிய கருங்கல் குவாரியில் இவ்வாறான கல் ஒன்று கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த இரத்தன கற்கள் அடங்கிய கல்லின் அடுத்த பக்கத்தில் கருங்கல் துண்டு ஒன்றே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.