Header Ads



ஹக்கீமின் மகளின் திருமணத்தில், பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு (படங்கள்)




- Aduthurai Shahjahan -

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று (12-09-2019) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்ல திருமண விழா சிறப்புடன் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், கேரளா மாநில மலப்புரம் மாவட்ட தலைவர் சாதிக் அலி தங்கள், மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், கேரளா மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது பஷீர், நவாஸ்கனி, மாநில செயலாளர்கள் காயல் மகபூப், ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில், நிஜாமுதீன், வக்ஃப் வாரிய உறுப்பினர் பாத்திமா முசப்பர், மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி, இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பைசல், முசப்பர், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, காயல் சாலிஹ்,

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், குனங்குடி ஹனிபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொருளாளர் முகம்மது யூசுப், துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சென்று மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிரிசேன, பிரதமர் ரனில் விக்ரம சிங்க மற்றும் இலங்கை அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.






3 comments:

  1. All these politicians from Southern India do not identify themselves as Arab descendants but identify their ethnicity by the language they speak respectively. The Tamil speaking Editor of Jaffna Muslim fail, to mention the identity of the Tamil lady (looks like late Karunanithy's daughter) Opportunity is the way of life of these Srilankan Tamil Muslims.............EmAG

    ReplyDelete
  2. Mabrook and Congratulations to the couple 👫

    ReplyDelete
  3. Is Hakeem an Indian origin?
    Why all these South Indian politicians invited?

    ReplyDelete

Powered by Blogger.