Header Ads



டயர்களில் எரிக்கப்பட்ட பிரேமதாசவின் யுகம், மீண்டும் உருவாக அனுமதிக்க மாட்டேன் - கோத்தா அறிவிப்பு


நடப்பு அரசாங்கம் விதித்துள்ள அநீதியான வரிகளை, தமது அரசாங்கத்தின் கீழ் நீக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

வரிச்சுமையால் வர்த்தகர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

வெளிநாட்டு ஆலோசர்களின் பிழையான ஆலோசனைகளால் இவ்வாறான வரைமுறையற்ற வரிகளை அரசாங்கம் விதித்துள்ளது.

இதனால் வரி செலுத்துகின்ற அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாம் ஆட்சி அமைத்தப்பின்னர் அவ்வாறான அநீதியான வரிவிதிப்பனவுகள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக, கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் பிணை முறி மோசடிக்கு, பிரதமர் ரணில் மாத்திரம் இன்றி, சஜித் பிரேமதாசவும் பொறுப்பு கூற வேண்டும் என்று தெரிவித்தார்.

டயர்களில் எரிக்கப்பட்ட பிரேமதாசவின் யுகம் மீண்டும் உருவாக அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.

1 comment:

  1. First of all you finish your court cases and come back to stage of election.

    ReplyDelete

Powered by Blogger.