ஏகமனதாக சஜித் தெரிவு - ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரித்தார்.
அவரது யோசனையை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
அதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமான தெரிவு செய்யப்பட்டதாக அக்கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிகொத்தவுக்கு வெளியில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

Congratulations
ReplyDelete