Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சண்டையிடும் ரணிலும், சஜித்தும் எப்படி நாட்டை நிர்வகிப்பார்கள்..? மகிந்த

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சண்டையிடும் இரண்டு நபர்களுக்கு நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியுமா என்பதை சிந்தித்து பார்க்க காலம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -25- நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய இரண்டு அதிகார தூண்கள் இருக்கின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திற்கு இழுத்து வருகின்றனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு பக்கம் இருக்கும் போது எப்படி நாட்டுக்கு சேவையாற்ற முடியும். வீட்டில் கணவனும் மனைவியும் இழுப்பறிப்பட்டால், ஏற்படும் நிலைமை போல், இவர்களின் செயற்பாடுகளால் நாடும் பிளவுப்பட்டுள்ளது. இவர்களின் நடவடிக்கையால், நாட்டு மக்களே பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ரணில் - சஜித் சண்டை என்பது புதிய விடயமல்ல. அதிகாரத்திற்கு வரும் முன்னர் இப்படி நடந்துக்கொள்ளும் இவர்களிடம் அதிகாரத்தை வழங்குவதும் பிரச்சினைக்குரியது. எங்களது அணியில் எந்த பிரச்சினையும் இல்லை. நாட்டின் அபிவிருத்தி பயணத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உங்களுக்குள் ஏன் சண்டை வரப்போகிறது, நீங்கள் தான் பிரதமர், உங்கள் தம்பி ஜனாதிபதி, உங்கள் அண்ணன் சபாநாயகர், உங்கள் அடுத்த தம்பி முழுநாட்டுக்கும் அபிவிருத்தி அமைச்சர், உங்கள் மகன் இளைஜர் விவகார அமைச்சர், மறு மகன் கடல்படைத்தளபதி, இன்னும் கேட்கவா வேண்டும்? பாவம் அம்மணிக்கு எதுவுமில்லையா, என்ன கொடுக்கப்போகிறீர்கள் அரசரே!

    ReplyDelete
  2. பீரிஸும் பாவம் அவருக்கும் ஏதாவது கொடுங்கள் அரசே!

    ReplyDelete

Powered by Blogger.