Header Ads



ஜனாதிபதி தேர்தலில் பாலித்த போட்டியிட்டால், அவருக்கு தொழிலாளர்கள் ஆதரவளிப்பார்கள்


பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என அமைச்சர் வேலுசாமி இராதா கிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

ஹட்டன் டிக்கோய பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ´பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும அண்மையில் சிறையில் வைக்கப்பட்டார். அர் என்ற தவறை இழைத்தார். அவர் தவறிழைத்திருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்பை சாவாலுக்கு உட்படுத்த முடியாது. அந்த தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். 

எனினும் அவர் செய்த வேலையை நாம் பாராட்ட வேண்டும். என்னவென்றால் தோட்ட தொழிலாளி ஒருவர் இறந்தவுடன் அவரை அடக்கம் செய்வதற்கு தோட்ட அதிகாரி இடத்தை வழங்கவில்லை. இதற்கு எதிராக செயற்பட்டு பலவந்தமாக அவரின் சடலத்தை பிரதி அமைச்சர் அங்கு அடக்கம் செய்துள்ளார். 

அவர் தொடர்பில் மிகவும் மரியாதையுடன் நாம் பேச வேண்டும். தற்போது சிறையில் உள்ள அவர் விடுதலையடைந்து வெளியில் வந்தவுடன் மக்களால் போற்றப்படுவார். அதனை யாராலும் தடுக்க முடியாது. 

அவர் பிரபல்யமான தலைவராக மாறுவார். குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு பெருபான்மையான ஆதரவை வழங்குவார்கள். அவ்வாறான ஒரு தலைவரே தற்போiது அவசியப்படுகின்றார். 

எனவே ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என

3 comments:

  1. நேர்மையான ஒரே அரசியல்வாதி.முஸ்லிம்களும் நிச்சயம் அவரை ஆதரிப்பர்

    ReplyDelete
  2. நேர்மையான ஒரேயொரு அரசியல்வாதி.முஸ்லிம்களின் ஆதரவும் நிட்ச்யம் உண்டு.

    ReplyDelete
  3. நேர்மையான ஒரேயொரு அரசியல்வாதி.முஸ்லிம்களின் ஆதரவும் நிட்ச்யம் உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.