Header Ads



AHM அஸ்வர் 2 ஆவது நினைவுப்பேருரை

 முன்னாள் அமைச்சர்அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வரின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏ.எச்.எம். அஸ்வர் இரண்டாவது நினைவுச்சொற்பொழிவு எதிர்வரும் 30 ஆம் திகதி தெமட்டகொட வீதி அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவைக்கேட்போர் கூடத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும்.நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்ாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கௌரவ அதிதிகளாக மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோனும் இலங்கையில் பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் முஹம்மத் ஹம்தல்லா செய்தும் கலந்துகொள்வார். 

நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.என்.எம். அனஸ் தற்கால யுகத்தில் பன்மைத்துவ சமூகத்தில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் உரையாற்றுவார். கட்டார் அரசின் ஆலோசகர் கலாநிதி எம்.ஹரிஸ்தீனும் உரையாற்றுவார். அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் ஞாபகார்த்தக்குழு இதனை ஏற்பாடு செய்துள்ளது. 

1 comment:

Powered by Blogger.