Header Ads



5 ஆம்தர புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்தால் 750 ரூபா வழங்கப்படும்

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 500 ரூபாய் உதவித்தொகை 50 சதவீதத்தால் அதிகரித்து 750 ரூபாயாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக இவ்வாறு மாதாந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

பல வருடங்களாக அதிகரிப்பு செய்யப்படாத நிலையில், அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

6ஆம் தரம் முதல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரம் வரையிலான கற்றல் நடவடிக்கைகளுக்காக இந்த உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது, வருடாந்தம் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.