30ம் திகதி SLFP யின் தீர்மானம்மிக்க. மத்திய செயற்குழு கூட்டம்
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அதன் ஊடக பேச்சாளர், வீரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் இரவு 7 மணி அளவில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இது மிகவும் தீர்மானம்மிக்க சந்திப்பாக இருக்கும்.
சிறிலங்கா சுதந்திர கட்சி இல்லாமல், கோட்டாபய ராஜபக்ஷவினால் வெற்றிபெற முடியாது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் சிறிலங்கா சுதந்திர கட்சி இணைய வேண்டுமாக இருந்தால், பொதுவான சின்னம், பொதுவான பெயர் என்பன அவசியமாக உள்ளன.
இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Post a Comment