Header Ads



பரிதாப நிலையில் உள்ள சிறிசேன,, பரிகாரம் தேடுவதில் தீவிரம்

இறுதியாக ஜனாதிபதி வெளிநாடு செல்வதற்கு முன்னர் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றார். அவருக்கு தான் ஜனாதிபதி வேட்ப்பாளராக வர மஹிந்த அணி ஆதரவு செய்யாது என்பது தெளிவாகவே விளங்கியிருந்தது. அதனால், தான் ஜனாதிபதியாகாது விடடாலும் பிரதமர் பதவிக்காவது வலை விரிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தில்தான் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தாலும் பொதுஜன பெரமுன - சுதந்திர கட்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்து இழுத்துச் சென்றார்.

இவ்வாறான நிலையில் பிரதமர் பதவிக்கு தானே போட்டியிடுவதாக மஹிந்த அறிவித்ததையடுத்து - ஜனாதிபதி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது, ஜனாதிபதியுமில்லை; பிரதமரும் இல்லை என்ற நிலவரத்துக்கு தள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளார். இதனால், இப்போது அவருக்கு தனது எதிர்கால அரசியல் மற்றும் சுதந்திர கட்சியை தக்கவைப்பது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இவ்விக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி தனது கையில் அடுத்தெடுத்திருக்கும் துரும்பே மாகாண சபை தேர்தல்களை நடாத்த நினைப்பதாகும். தனக்கு கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கிடைத்திருந்த 1.5 மில்லியன் வாக்குகளை பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருக்கு தருவதாக இருந்தால் - இரு கட்சிகளும் இணையும் நிலையில் தனது அணிக்கு மாகாண சபையில் எத்தனை வீதமான வேட்பாளர்கள் தர வேண்டும் எனவும் - பாராளுமன்ற தேர்தலில் எத்தனை வீதமான வேட்பாளர்கள் தர வேண்டும் எனவும் - மாகாணங்களில் எத்தனை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் - பாராளுமன்றத்தில் எத்தனை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தர வேண்டுமெனவும் பேரம்பேசுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ள - ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தியதாக மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி விரும்புகிறார்.

இது மஹிந்த அணியை பொறுத்தவரைக்கும் ஒரு தலையிடியாக அமையும். ஏன்னெனில், கூட்டுக்கட்சிகள் இவ்வாறான ஒரு பேரம்பேசலை விரும்ப மாட்டார்கள். அவர்கள் சிறிசேனவை துரோகி என்ற பார்வையில் இருப்பதால் இதற்கு எந்தளவு ஒத்துழைப்பார்கள் என்பது கேள்விக்குறியே. ஆனால், வேறு வழியும் இல்லை என்பதே உண்மை. ஏனெனில், சிறுபான்மை வாக்குகளில் பெரும்பானமையை பெறுவது கஷ்டம் என்ற நிலையில், பெரும்பாண்மை சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை சிதறவிடாமல் இருப்பதற்கு சில தியாகங்களை செய்ய வேண்டியே வரும் என்பது கவனத்தில் கொள்ளப்படும்.

இருப்பினும், இவ்வாறான பேரம்பேசல் நிலையிலிருந்து தப்பிக்க மஹிந்த அணி - நீதிமன்றத்தில் ஆஜராகி, மாகாண சபைகள் தேர்தல் தற்போது நடத்தப்பட முடியாது என்ற உச்ச நீதிமன்ற கருத்தைப் பெற முயற்சிக்கலாம். யாப்பு சார்ந்து வரும் பிரச்சினைகளுக்கே உச்ச நீதிமன்ற கருத்து கேட்க முடியும் எனவும் - ஏலவே, விசாரணையில் உள்ள அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் கேட்கப்பட்டிருக்கும் விடயமே இப்போது ஜனாதிபதி கருத்துக் கேட்டுள்ள விடயம் என்பதாலும் - மாகாண சபை தேர்தல் இப்போதைக்கு நடாத்தும் கருத்தை உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடாது எனவும் வாதிட்டு - உச்ச நீதிமன்ற கருத்து வழங்கப்படாமல் தடுக்க முயற்சிக்கலாம்.

ஆக, ஜனாதிபதி சிறிசேனவின் நோக்கம் உண்மையாக மாகாண சபை தேர்தல்களை நடாத்தி - சபைகளை மக்கள் பிரதிநிதிகளின் கைகளில் கொடுத்து - மக்களுக்கு சேவைகளை பெற்றுக்கொடுப்பதல்ல. மாறாக, தான் இழந்து நிற்கும் அரசியல் பிடிமானத்தை மீளப்பெறுவதும் - தன்னையும் தனது கட்சியையும் எதிர்காலத்தில் நிலைநிறுத்திக்கொள்வதற்குமே அன்றி வேறெதற்கும் அல்ல.

அது மாத்திரமன்றி, இதே ஜனாதிபதிதான் மாகாண சபைத் தேர்தல்களை அப்போதைக்கு நடத்துவதை தடுப்பதில் தீவிரமாக இயங்கியவர். மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டால் தமது கட்சி தோற்று தான் அவமானப்பட்டுவிடுவேன் என்று உதவி கோரி நின்றவர். இப்போதைக்கு இதனை தூக்கி பிடிக்கார் என்றால் '' சோழியன் குடுமி சும்மாவா ஆடும்''.

AL Thavam

2 comments:

  1. எல்லாமே நரி விளையாட்டு ஆனால் எமது வாக்காலப் பெருமக்களும் மிகச் சிரந்த முட்டாள்கள்

    ReplyDelete
  2. சும்மா இல்ல 5 வருடங்கள் வெறுமனே வீணா போயிற்று நாடு !

    ஆச்சி மாற்றம் அவசியம் வேண்டும் !

    ReplyDelete

Powered by Blogger.