சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட கோரி, கையெழுத்து சேகரிக்கும் திட்டம் ஆரம்பம்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான உத்தேச கூட்டமைப்பு மற்றும் அதன் யாப்பு தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடொன்றை எட்ட முடியாதுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி விரிவான கூட்டமைப்பு கூடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
யாப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அது தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
மேலும், கூட்டமைப்பொன்றும் அதற்கான திட்டமொன்றும் அவசியம் என்பதுடன், தலைமைத்துவ சபை தேவை எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடுமாறு கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் திட்டமொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கஜசவி சோசலிச முன்னணியின் ஏற்பாட்டில் கடவத்தையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
2020 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு வலியுறுத்தி 20 இலட்சம் கையொப்பங்கள் இதன் ஊடாக சேகரிக்கப்படவுள்ளன.

Post a Comment