பெண் ஒடுக்குமுறைக்கு காரணமாக அமைந்த, புர்க்கா மீதான தடை
- Kalai Marx -
நெதர்லாந்தில் கொண்டு வந்துள்ள பூர்க்கா தடை சமூகத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் பின்னர், பொது இடங்களில் பூர்க்கா அணிந்து வரும் பெண்ணை பொது மக்கள் தடுத்து வைக்க முடியும். அதாவது "பொலிஸ், அல்லது நீதிபதியின் வேலையை" பொது மக்களே செய்ய நினைப்பார்கள். இதை டச்சு மொழியில் Burgerarrest என்பார்கள்.
பொது மக்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று, சமூக வலைத்தளங்களில் தீவிர வலதுசாரிகள் மக்களை தூண்டி விடுகின்றனர். அதே நேரம், பூர்க்கா அணிந்த பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்றும் சிலர் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் டிவிட்டரில் #burkabuddy என்றொரு ஹேஷ்டாக் தொடங்கி உள்ளனர்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர், டச்சு இனவாதக் கட்சியான PVV பூரணமான பூர்க்கா தடை கொண்டு வருமாறு பிரேரித்தது. அதற்குக் கூறிய காரணம் இது "மேற்கத்திய பண்பாட்டுக்கு முரணானது" என்பது தான். அப்போது அதை எதிர்த்து வந்த பெரும்பான்மைக் கட்சிகள், தேர்தலில் ஓட்டுக்களை இழக்க விரும்பாத காரணத்தால், தற்போது பூர்க்கா தடையை ஆதரிக்கின்றன.
பூர்க்கா தடையை ஆதரிப்பவர்கள் இதனை "பெண் ஒடுக்குமுறையாக" பார்க்கிறார்கள். ஆனால், பூர்க்கா அணிந்த பெண்களை ஆய்வு செய்த சமூக ஆர்வலர்கள் அதை மறுக்கிறார்கள். பல பெண்கள் தமது சொந்த விருப்பத்தின் பேரில் தான் பூர்க்கா அணிவதாக தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் சமூகத்தை மட்டுமல்லாது, சொந்த குடும்ப உறுப்பினர்களை கூட எதிர்த்து நிற்கிறார்கள்.
பலர் நினைப்பதற்கு மாறாக பூர்க்கா அணிந்த பெண்கள் தினந்தோறும் வேலைக்கு சென்று வருகிறார்கள். புதிய தடைச் சட்டம் காரணமாக அவர்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சுருக்கமாக: பெண்களை விடுதலை செய்வதாக சொல்லப்பட்ட பூர்க்கா தடை தான் பெண்ணொடுக்குமுறைக்கு காரணமாக அமைந்து விட்டது.
நம் நாட்டு புர்கா பெண்களின் நிலமையும் இதுதான்,
ReplyDeleteமருத்துவம்,கல்வி, தொழில்,போக்குவரத்து போன்றவற்றில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்,
விரைவில் தடை நீக்கப்பட்டு,ஏனையோரைப் போன்று அவர்களும் பூரண உரிமை பெற வேண்டும்.
புர்கா நிகாப் அணியத்தான் வேண்டுமா?
ReplyDeleteஅணியாமல் இருப்பது ஹராமா?
அணியாதவிடத்து அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற முடியாது போகுமா?
நிகாப் புர்கா அணிவது அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத் தருமா?
நிகாப் புர்கா அணியாதவர்களின் நல்ல செயல்கள் வீணாகுமா?
thadi wekka wakkiladawanual allam burkawa paththi pesuranuhal
ReplyDelete