ஐதேக ஒருவரை நியமிக்காவிட்டால், கட்சியிலிருந்து விலகுவதாக இரத்தத்தினால் எழுதிக் கொடுக்கிறேன்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவரை வேட்பாளராக நியமிக்காது போனால், கட்சியிலிருந்து விலகுவதாக தனது இரத்தத்தினால் எழுதிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி. சமிந்த விஜேசேகர தெரிவித்தார்.
ஐ.தே.கட்சியின் பின்னாசன உறுப்பினர் ஹேசா விதானகேயுடன் இணைந்து இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
இதேவேளை, அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி 10 லட்சம் கையொப்பத்தை சேகரிக்கும் நடவடிக்கை இன்று (03) கடவத்தையில் பின்னாசன எம்.பி.க்களினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. DC

Post a Comment