Header Ads



ஐ.தே.கவுடனோ, சஜித்துடனோ இனியொருபோதும் சுதந்திர கட்சி இணையாது -

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஜனாதிபதி புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டியதுமில்லை, அதற்கான அவசியமும் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித், மைத்திரி புதிய கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

செயலாளர் - தயாசிறி ஜயசேகர, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை. தனித்து பயணிப்பது தொடர்பாக மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றதாகவும், தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முரண்பாடுகள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ஐ.தே.கவுடனோ அல்லாது சஜித்துடனோ இனியொருபோதும் சுதந்திர கட்சி இணையாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இரண்டு பிரதான கட்சிகளைச்சேர்ந்த நீங்கள் அனைவரும் பிறப்பிலும், வாழ்விலும், இறப்பிலும் தவளைகள். பாய்ந்து மக்கள் சொத்தைச் சூறையாடுவதைத் தவிர உங்களுக்கு கொள்கையோ, வாழ்வில் வேறுநோக்கங்களோ கிடையாது.மக்கள் சொத்துக்களைச் சூறையாடுவதும் பாய்ந்து பாய்ந்து தோப்புக்கரணம் அடிப்பதும் தான் தவளையின் பணி.

    ReplyDelete

Powered by Blogger.