சாதனை படைத்தார், கீர்த்தி தென்னக்கோன்
இன்றைய தினம் -05- மத்திய மாகாண ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் 31 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் ஒரே ஆண்டில் ஒருவர் மூன்று மாகாணங்களில் ஆளுனராக பதவி வகித்தது கிடையாது.
அந்த சாதனையை முதன் முறையாக மத்திய மாகாண ஆளுனர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் நிலைநாட்டியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 4ம் திகதி ஊவா மாகாணசபையின் ஆளுனராக தெரிவு நியமிக்கப்பட்டார். இதன் போது இலங்கையின் மிகவும் இளவயது ஆளுனர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டிருந்தார்.
எனினும், ஒரு வார கால இடைவெளியில் அவர் தென் மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன், இன்றைய தினம் மத்திய மாகாண ஆளுனராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment