Header Ads



நாம் என்ன குற்றம் செய்தோம்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும் - கோத்தபாய

தமிழ் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை மீட்டெடுத்த ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என சில அரசியல்வாதிகள் கண்டபடி விமர்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாம் உண்மையில் என்ன குற்றம் செய்தோம்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும் என குறித்த அரசியல்வாதிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நானே. எனக்கு மாற்றீடாக எமது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள்.

வீண் வதந்திகளை எவரும் நம்பவே வேண்டாம். வடக்கு - கிழக்கு - மலையகம் என நாடெங்கிலும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன்.

என்னை தமிழ் பேசும் மக்களின் எதிரியாகக் சித்தரித்துக்காட்ட காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றார்கள்.

தமிழ் பயங்கரவாதிகளின் ஆயுத போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ச குடும்பம்.

இப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று குறித்த அரசியல்வாதிகள் கண்டபடி விமர்சிக்கின்றார்கள்.

நாம் உண்மையில் என்ன குற்றம் செய்தோம்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துமாறு குறித்த அரசியல்வாதிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

எந்தத் தடைகள் வந்தாலும் அதனை தகர்த்தெறிந்து அரச தலைவர் தேர்தலில் நான் வெல்வது உறுதி. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பாதுகாவலனாக - நல்லதொரு தலைவனாக நான் இருப்பேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. இவரின் வருகை சில மீதமாக ஒழிந்து கொண்டிருக்கும் பயங்கரவாத புலிகளுக்கு,மிகவும் கசப்பான செய்தியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.