சற்றுமுன்னர் ரணில், வெளியிட்டுள்ள அறிக்கை
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் வெற்றியடைந்து ஸ்தீரமான அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம் என்றும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் தனிக்கட்சியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் உள்ள கடின தன்மையினை கடந்த கால அரசியல் குறித்து அவதானத்தில் கொள்ளும் போது அனைவராலும் உணர கூடிய விடயமாகவே காணப்படுகின்றது.
எனவே தான் பரந்துப்பட்ட கூட்டணியை அமைத்து வெற்றிப்பெற கூடிய வகையில் அதனை வலுப்படுத்தும் பணிகளில் முழு அளவில் ஈடுப்பட்டோம். இந்த இலக்கிலிருந்து நானோ எனது பங்காளி கட்சிகளின் தலைவர்களோ விலக போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று -05- திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment