Header Ads



நீர்கொழும்பில் குருக்களின் கழுத்தில், கத்தி வைத்து மிரட்டி நகைகள் கொள்ளை

நீர்கொழும்பு, அக்கரபான பகுதியில் உள்ள ஆலயமொன்றின் பிரதம குருக்களை தாக்கி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள பிரதம குருக்களின் வீட்டில் கொள்ளையர்கள் சிலர் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் பிரதம குருக்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்த ஆபரணத்தை பரித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது காயமடைந்த 63 வயதுடைய குருக்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு பிரதம குருவின் வீட்டில் அத்து மீறி உட்புகுந்து கொள்ளையர்கள் சிலர் ஒரு தொகை பணத்தையும் சில சொத்துக்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக குறிப்பிட்டு பிரதம குருவினால் கட்டானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(செ.தேன்மொழி)

No comments

Powered by Blogger.