Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவியேற்பை, நிறுத்திய Jaffna Muslim செய்தி


- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -

ஒருவரைத் தவிர ஏனையவர்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என ஜப்னா முஸ்லிம் இணையம் கடந்த 11.07.2019 அன்று முதன்முதலாக ஓரு செய்தியை பிரசுரித்திருந்தது. http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_187.html

அதன்பின் மற்றுமொரு செய்தியையும், Jaffna muslim  இணைம் பதிவேற்றியது. அதாவது ஹரீஸ் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்க மாட்டாரென பதிவேற்றியது.

இச்சசெய்தியானது மிகப்பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. 

ஹரீஸுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, இதுகுறித்து பலர் விசாரித்தனர். அவர் ஜப்னா முஸ்லிம் செய்தியை உறுதிப்படுத்தினர். 

இந்நிலையில் 15.07.2019 பிற்பகல் 3 மணிக்கு, முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்க இருந்தனர். இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. 

யார் யாருக்கு, என்னனென்ன பதவிகள் என்பதை, பிரதமர் ரணில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹரீஸ் அமைச்சுப் பதவி ஏற்கப்போவதில்லை என்பதில் விடாப்பிடியாக நின்றமையால், அமைச்சுப் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது.


1 comment:

  1. கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலாளர்களில் ஹரீஸ் மிக தலையானவர். தகுந்த காரணத்துடன் இப்பதவியினை பொறுப்பேற்க அவர் மறுத்தால் சகல முகா பிரதிநிதிகளும் அதற்குச் சார்பாகவே இருத்தல் வேண்டும். It means ...........!

    ReplyDelete

Powered by Blogger.