ஷாபி குறித்து CID முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை - ரதன தேரர்
வைத்தியர் சிஹாப்தீன் ஷாபியின் சொத்துக்கள் குறித்து சிஐடி முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தாய்மார்களுக்கு கருத்தடை செய்யப்படும் முறைமையைச் சரியாக பரிசோதனை செய்யப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன் இந்த அரசாங்கத்திற்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யமுடியாதா?
இறக்குமதி செய்ய முடியாவிட்டால், தேவையான உபகரணங்களை பொது மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுவர தயார்.
வைத்தியர் சங்கம் என்ன முன்மொழிகிறது என்பதில் துணை சொலிசிட்டர் ஜெனரலோ அல்லது அட்டர்னி ஜெனரல் துறையின் துணை அட்டர்னி ஜெனரலோ வேறுபட்ட பார்வையைக் கொண்டிருக்கிறார்களா எனவும் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்?
இது குறித்த சரியான விசாரணைகளை மேற்கொள்ளாவிட்டால் குருநாகல் மக்களின் உதவியுடன் நாங்கள் உண்மையை வெளிகொணர்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் சிஹாப்தீன் ஷாபி ஆயிரக்கணக்கான சிங்கள தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டார், பல சொத்துக்களை சேர்த்தார் என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்களும், உறுதியான சாட்சியங்களும் இல்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தார் என்றோ அல்லது குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றத்தை செய்தார் என்றோ உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது எனவும் சட்டமா அதிபர், நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேரர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் அல்லது ஓய்வு குடுக்க வேண்டும் !
ReplyDeleteCID தனது பதவியை ராஜினாமா செய்து இந்த நாய்க்கி கொடுக்கவும்
உனது அப்பனும் உன் பிறப்பில் சரியான முடிவு எடுக்கத் தவறி விட்டார்
ReplyDeleteஇந்தளவு இவர் CID யை விமர்சனம் செய்கிறார்,நீதி மற்றும் சட்டங்களை விமர்சிகிரார்,சட்ட மா அதிபர் திணைக்கலத்தை கேள்விக்குட்படுத்துகிரார்.பணத்தை கொடுத்து பொய் கூற சில தாய்மார்கலை முறையிட வைத்தார்.ஆனால் மருத்துவ பரிசோதனை செய்யும் நிலை வந்த போது பொய் கூறிய அவர்கள் தலை தெரிக்க ஓடி விட்டார்கள்.இவ்வளவு தில்லு முல்லு செய்யும் இவரை இன்னும் ஏன் சட்டமும்,அரசும் கை கட்டி வேடிக்கை பார்ப்பது.ஏனெனில் அவர் ஒரு பெரும்பாண்மை இனத்தவர்.இதுவே ஒரு சிறுபான்மை மதகுருவாக இருந்தால் நிலமை எவ்வாறு இருந்திருக்கும்?
ReplyDeleteஅதைத்தான் நாங்களும் கூறுகின்றோம். உடனடியாக அதுரலிய ரத்ன தேரரின் ஹிமி பட்டத்தைக் கழட்டிவிட்டு அவரை பொலிஸ் பதவியில் அமர்த்துமாறு கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம். ஒன்னு ரத்ன தேரர் தன்ட தேரருக்கான கடமைகளைச் செய்ய வேணுங். இல்லாட்டி பாராளுமன்ற உறுப்பினருடைய கடமைகளையாவது செய்ய வேணுங். இதையெல்லாம் உட்டுப்போட்டு ரோட்டுல கெடந்து லவ்வாடி படுறதை உடனடியாக நிப்பாட்டிப் போடனுங்.
ReplyDeleteபலோப்பியன் குழாய் சம்பந்தமாக ரத்ன தேரரிடம் படித்து அறிந்து கொள்ளுங்களேன் சாபி சேர்.
ReplyDelete