ரிஷாத்துக்கு எதிராக, ரதன தேரர் அஹிம்சை வழி போராட்டம்
ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக மக்களுடன் இணைந்து அஹிம்சை வழி போராட்டமொன்றை முன்னெடுக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய, சதஹம் செவன பௌத்த நிலையத்தில் நேற்று(29) இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து;ளளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில், ரிஷாத் பதியுதீனுக்கு தனது முஸ்லிம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்தது அமைச்சுப் பதவியா அல்லது நாட்டு மக்களின் எதிர்காலமா என்பதை தீர்மானிக்கும் நாள் வந்துள்ளது. அதுதொடர்பில் நாம் தீர்மானமிக்க நடவடிக்கையொன்றை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார். metro

மஹிந்தவே இவரை ஏசி விரட்டும் நிலமையில்,இவர் பேச்சு மட்டும் விழுந்தும் மீசையில் மண் படாத கதை.பின் வழியால் பாரழுமன்ரம் போனவர்தானே அடுத்த முறை பின் வழி கிடைக்காது என ஊர்ஜிதமாகிவிட்டது.எனவே இனவாதத்தின் மூலமாக வாக்கு தேவை.ஆனால் சிங்களவர்கள் இந்த முறை நல்ல பாடம் கொடுப்பார்கள் இவருக்கு.
ReplyDeleteஎன்னய்யா இது,தற்கொலை செய்வேன் எனச் சொல்லிவிட்டு இப்போ அஹிம்சை போரட்டமாம்,ஒரு மாதத்துக்குள் இப்படியெல்லாம் பேச்சை மாற்ரி மாற்ரி பேசுகிரார்.
ReplyDeleteஅகிம்சை என்பது கடும் போக்குக்கு எதிரான வழி. அத்துரலிய ரத்ன தேரரை இனம் கண்டவர்களுக்கு அவரது இருமுகம் புரிந்து விடும்.
ReplyDeleteAvarukku Meesai irunthal thane man ottum
ReplyDelete