98 வீதம் முஸ்லிம்கள் ஐ.தே.க.க்கு வாக்களித்தும் அடி, உதை அவமானமும்தான் மிச்சம்
2005ல் ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சியின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிதான் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவுடன் உலமா கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுஜன பெரமுன கட்சி என்பது கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது ஆளும் ஐ தே கவை விட அதிக ஆசனம் பெற்ற கட்சியாகும். இத்தகைய தேசிய கட்சி தன்னுடன் இணைந்து செயற்பட முன் வருமாறு உலமா கட்சிக்கு அழைப்பு விடுத்ததுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டதன் மூலம் அக்கட்சி இனவாதமற்ற கட்சி என்பது வெளிப்படையாகியுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக உலமா கட்சி உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுனவுடன் முதலாவதாக இணைந்து கொண்ட முதலாவது முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும் என்பது வரலாறாகும். இது எமது இடைவிடாத அரசியல் செயற்பாட்டுக்கும் நேர்மையான அரசியலுக்கும் கிடைத்த பெருமையாகும்.
பொதுவாக முஸ்லிம்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதையே விரும்புவர். காரணம் அரசியல் என்றால் அதன் மூலம் சுயநலன்கள் பெற வேண்டும் என்பதுவே பெரும்பாலான முஸ்லிம்களும் எண்ணமாகும். இதன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் என்பது சந்தர்ப்பவாத, சுயநலவாத அரசியலாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி சிங்கள மக்களின் செல்வாக்குள்ள எதிர்க்கட்சிகளிலும் முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை நாம் வழிகாட்டியுள்ளோம்.
இன்றைய அரசியல் சூழ்நிலை என்பது தமிழ் கூட்டமைப்பின் சூழ்நிலைக்கைதியாக ஐக்கிய தேசிய கட்சி மாறியுள்ளது. தமிழ் கூட்டமைப்பு பலமாக உள்ள கட்சியினால் முஸ்லிம் சமூகம் எந்த உரிமையையும் பெற முடியாது. மாறாக இருப்பதையும் இழக்க வேண்டி வரும் என்பதை முஸ்லிம் சமூகம் நிறையவே படித்து விட்டது.
இதனை ஒரு பாடமாகக்கொண்டு சிங்கள மக்களின் 70 வீத ஆதரவு கொண்ட பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்த முஸ்லிம்கள் முன் வரவேண்டும். எதிர் காலத்தில் யார் ஆட்சியமைப்பார் என்பதை நாம் சொல்ல முடியாது. அது இறைவன் கையில் உள்ளது. ஆனாலும் ஒன்றில் ஐ தே க அல்லது பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும் என்பது உறுதியானதாகும். அந்த வகையில் நாம் பொதுஜன பெரமுனவுடனும் எமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
98 வீதம் முஸ்லிம்கள் இந்த ஐ தே க அரசுக்கு வாக்களித்தும் அடியும் உதையும் அவமானமும்தான் மிச்சம். ஆகக்குறைந்தது 99வீதம் இந்த ஆட்சிக்கு வாக்களித்த கல்முனையை கூட நம்மால் காப்பாற்ற முடியாமல் உள்ளது. முதுகில் குத்தும் நண்பனை விட நேருக்கு நேர் மோதும் எதிரியால் நமக்கு பாதிப்பு குறைவு என்பதை நாம் புரிய வேண்டும். எதிர் காலத்தில் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தால் உலமா கட்சி அதன் பங்காளிக்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தர முடியும். இதற்கு வழியமைக்கும் வகையில் முஸ்லிம்கள் உலமா கட்சி மூலம் பொதுஜன பெரமுனவை பலப்படுத்த முன்வர வேண்டும்.

http://www.jaffnamuslim.com/2019/07/dr_28.html
ReplyDeleteதமிழர் கூட்டமைப்பு பலமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றதுதான் இந்த பதிவின் சாராம்சம். கிழக்கில் தமிழர்கள் தமிழர் கூட்டமைப்பு வென்றால் முதல் அமைச்சர் உட்பட எல்லா நலன்களையும் முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள் தமிழருக்கு ஆபத்து என்கிற அமைப்புகள் பலம் பெறுகின்றன. அவற்றிலும் பொதுஜன பெரமுன சார்பு உள்ள கருணா பிள்ளையான் போன்றவர்களும் ஐதேக சார்புள்ளவர்களும் கூட்டாக முன்நிலை வகிக்கிறார்கள். கூற்றுப்படி ஐ,தே.க வின் ஆட்ச்சிக்கு முன்ன்னர் இருந்த பெரமுன ஆட்ச்சி முஸ்லிம்களின் பொற்காலம் என்றாகிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteOru wakkum illatha ulama katchi mahinda udan oppandam seydu yaarukkum enda payanum illa.kuppaiku poda than ulladu.
ReplyDeleteஇவரது கட்சியில் உள்ள
ReplyDeleteஉறுப்பினர்கள் எத்தனை
பேர் உள்ளார்கள். இவரை
த் தவிர்த்து ஒரு மூன்று பேராவது இருப்பார்களா?
He is an unaccountable person, don't worry about his statements...
ReplyDeleteயூஎன்பீக்கு திட்டித் தீர்க்கும், மஹிந்தவுக்கு வால்பிடித்து நக்கித் திரியும் இந்த நாலு காலுக்கு மூன்றாம் தர அரசியல் வம்படிக்க தயவுசெய்து இந்த இணையத் தளத்தில் களம் அமைத்துக்கொடுக்கவேண்டாம் என இணையத் தளம் நடத்துபவர்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
ReplyDeleteஉங்களை போன்ற ஒரு அரசியல் தலைவரே உலமாசபை தலைவராக இருந்தால் அரசியல் உரிமைகளை பேரம் பேசி ஆட்சியில் பங்கு பெறலாம்
ReplyDeleteThere is no UNP government but it is SLFp government led by MY3. Under SLFP government not only Muslims but all SriLankan suffered. But Under SLFP government Muslims business places are systematically destroyed and now too continue. Sirimao Bandaranayake nationalized Muslim owned business places especially JB textiles but JR returned it but then half is destroyed. They did not spare even normal Buhary Hotel but Sinhalese owned big tourist hotel not touched. Then Under Chandrika Mavenella Muslims owned Business places burned down. Under Mahinda in 2006 Most Muslims, owned business places were destroyed, especially in Beruwala. again in 2014 Aluthgama incident. Now Going on in under this dangerous man MY3.
ReplyDeleteUNP is pro-minority and followed a little bit of liberal policy. SLFP was rejected by the people but Ashraff resuscitated it taking UNP votes in the name of Muslim congress and turned it to SLFP votes. ever since we are suffering badly. Yet these Eastern politicians and Moulavies did not understand this. Hisbullah, Athullah, AShraff, Barbarian Saharan and this Moulavies all backing these racist party and from an eastern province. It is eastern Communal politics brought destruction to Muslims. How ignorant these Moulavies? they still not understand who is enemy and who is friends.
SO I APPEAL TO SOUTHERN AND WESTERN MUSLIMS, ALTOGETHER ALL MUSLIMS SHOULD NOT FOLLOW EASTERN POLITICIANS AND RACIST POLITICS. RAUF HAKEEM TOO DANGEROUS AND VOTE BUSINESSMAN.