சுவிஸ் - சொலத்தூண் ஆற்றில் மூழ்கி, இலங்கை இளைஞர் மரணம்
யாழ்.தின்னவேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்திற்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சுவிஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடலை போலீசார் மீட்டு , வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment