Header Ads



முஸ்லிம்களின் தர்மத்திற்கு எதிராக கிளர்ந்தவர்களுக்கு, ஏழைகளின் பசி எங்கே புரியப்போகிறது..?


- Dr Ahamed Nihaj -

“எங்க இருந்துமா கிளினிக்குக்கு வாறீங்க?”

“............. இருந்து”

“பஸ்லயா வாறீங்க?”

“ஓம், 40 ரூபா கொடுக்கோணும்”

“என்ன வருமானம் அம்மா உங்களுக்கு?”

“வீட்டு வேலை செய்யப் போற, ஒரு நாளைக்கு ஒரு இரு நூறு ரூபா கிடைக்கும். போனாத்தான் காசு, போகாட்டி வேல இல்ல”

“இதென்ன கையில துண்டு?”

“இதா, இந்த நேர்ஸ் மிஸ் தந்தாங்க, பகல் சாப்பாட்டு டோக்கன்”

“பகல் சாப்பாடு டோக்கனா? யாரு தர்ராங்க?”

“தெரியாதா டாக்டர் உங்களுக்கு? நான் கிளினிக் வாற நாள்களில் இங்கதான் சாப்புர்ர, எல்லாம் இலவசம். இந்த துண்ட காட்டினா போதும்”

இலவசமா சாப்பாடு கொடுக்குறாங்களா? இவ்வாறுதான் எனக்கு இந்த ஜனபோஷ அறிமுகமானது. இதை யார் செய்கிறார் என தேடிப்பார்த்ததில், இலங்கையின் முண்ணனி முஸ்லிம் வர்த்தகர்களில் ஒருவரான expo lanka ஹாஜியாரின் பெயர் வெளிவந்தது. 

கொழும்பு மற்றும் மகரகமை பிரதேச பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் அமைந்த, மிகப் பெறுமதியான காணிகளை விலை கொடுத்து வாங்கி, இந்த வைத்தியசாலைகளுக்கு வரும் ஏழைகளுக்கு இலவசமாக காலை மற்றும் மதிய உணவுகளை வழங்கி வந்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 3000 பேர். இது கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தது. கிளினிக் மற்றும் வாட்டுக்களில் உள்ள மிஸ்மாரிடம் டோக்கன்கள் இருக்கும். அவர்கள் அங்கு வரும் ஏழைகளுக்கு கொடுப்பார்கள். அதை அவர்கள் அங்கு கொண்டு கொடுத்து சாப்பிட்டுச் செல்வார்கள்.

இதில் பயனடைந்த அத்தனை பேரும் ஏழை எளிய இலங்கையர்கள். 

இந்த நிலையத்தை இன்றுடன் மூடிவிடுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. காரணம்- பல மில்லியன் கணக்கான ரூபாய்களுக்கு சொந்தக்காரரான ஒரு அரசியல்வாதி, இந்த முஸ்லிம்கள் நடத்தும் தர்மத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்ததுதான். அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வருவதையே இழுக்காக கருதும் இந்த வர்க்கத்திற்கு ஏழைகளின் பசி எங்கே புரியப்போகிறது?

2 comments:

  1. ஏழைகளுக்கு இலவசமாக சாப்பாடு கொடுப்பதை கூட இனவாததில் போட்டு விடும் இவர்கள்,அடுத்த வாக்கு வேண்டும் என்பதற்காக ஏழை மக்களுக்கு கிடைத்த உணவை கூட விட்டு வைக்காமல் இனவாதம் பேசுவதை பார்க்கும் போது,விரைவில் Sri Lanka வில் அதிகம் மனநோயாளிகள்தான் அரசியலில் இருப்பார்கள் போல.

    ReplyDelete
  2. Expo Lanka Rafeek ஹாஜியார் ஜென்னாவின் உயர் பிரிவினை வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களுடைய முயற்சிகளை அங்கீகரிப்பானாக. எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் செய்யப்படும் முயற்சிதான் இந்த இலவச சேவை. எத்தனையோ முஸ்லிம் பெரியார்கள் கோடிக்கணக்கான பணத்தினை எவ்வித பேதங்களும் இல்லாமல் ஸதகா கொடுக்கின்றார்கள். அண்மையில்கூட ஒரு ஹாஜியார் 30 இலட்சம் ரூபாவினை மெல்கம் ரஞ்சித் அவர்களுக்கு ஒரு சேவையின் நிமித்தம் கொடுத்துள்ளமை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அல்லாஹ்வும் தன்புறத்திலிருந்து செல்வத்தை அவர்களுக்கு வாரிவாரி வழங்குகின்றான் அவர்களும் மக்களுக்கு தங்களால் செய்யக்கூடியவற்றைக் காட்டிலும் மேலதிகமாக அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக மட்டும் செலவிடுகிறார்கள். அந்த வல்லா (நாய்) சொன்னிச்சு இந்தக் கொரங்கும் பன்னிக் குட்டியும் சொன்னிச்சு என்கிறதுக்காக அல்லாஹ்வின் அருளுடன் நடக்கக்கூடிய உதவிகளை நிறுத்தி விடக்கூடாது. ஏழை மக்கள் வறுமையில் வாழும் மக்கள் மிகவும் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.