Header Ads



முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்


நாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் அலுத்கம விமலரத்ன தேரர் விசனம் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு தனியார் தொலைக்காட்சியில் “புதிய பாராளுமன்றம்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை மத குருவொருவருக்கு எப்படி பேசுவது என்பது குறித்த அறிவை எந்த இடத்திலும் முஸ்லிம் மதகுருக்கள் வழங்கவில்லை. அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை. பிள்ளைக்குப் பாடசாலையில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை.

காத்தான்குடிப் பிரதேசத்தில் தேரர் ஒருவர் வாகனத்தில் போய் இறங்க முடியாதுள்ளது. இதனை வைத்து அங்குள்ள அனைவரும் அடிப்படைவாதிகள் என்று கூறவில்லை. எம்மிடையே புரிந்துணர்வு இன்னும் வளர்க்கப்பட வேண்டும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

6 comments:

  1. இஸ்லாத்தில் அனைவரும் சமம் . பெளத்த மதத்தை பெறுத்தவரை சமன் இல்லை போல.நாங்கள் படைத்தவனையே அவன் என்றுதான் சொல்லுவது பொஸ்

    ReplyDelete
  2. மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விடயத்தில் முஸ்லிம்களிடம் குறைபாடு காணப்படுவது உண்மை தான். அவர் சொல்லும் காரணமும் சரியானதே.

    ReplyDelete
  3. Come boss meanse different. Its a welcome word for Terror Monks. He might have thought this monk was a terror.

    Kaathankudy Different Story. In that case Monk is right. We need to teach them how to respect other religious people.

    ReplyDelete
  4. Kattankudikku oru therar or niruvathim anpalippu vanki selhirar

    ReplyDelete
  5. What is wrong in the word of BOSS?
    that can be used for any superiority positions. Here, the monk has been respected well instead using bad words.
    Does this expect he must be called as Your Excellent ?

    ReplyDelete

Powered by Blogger.