நல்லூர் கோயிலை தாக்கவுள்ளனர், அநாமதேய கடிதத்தால் பரபரப்பு - பொலிஸார் விசாரணை
யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலை தாக்கப் போவதாக கிடைக்கப்பெற்ற அநாமதேய கடிதம் ஒன்று குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநரின் அலுவலகத்திற்கு வந்ததாகவும் அதன் பின்னர் ஆளுநர் இது குறித்து உடனடியாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனையடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதுபற்றி உடனடியாக விசாரணைகளை செய்யுமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியை பணித்துள்ளார்.
அதேசமயம் நல்லூர் கோயில் வளவில் இராணுவத்தினர் கூடுதல் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
”எனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் கோவிலை வரும் 18 ஆம் திகதி தாக்க திட்டமிட்டுள்ளனர்.” என்று பேனையால் எழுதப்பட்ட கடிதமே இப்படி வந்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவித்தன.
நல்லூர் கோயில் பகுதியில் இன்று முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
tamilan

Post a Comment