jaffna muslim உள்ளிட்ட உடகங்களில், வந்த செய்தியை மறுக்கிறார் குமார் சங்கக்கார
தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்பது அருமையான கற்பனை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்கக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் அதற்கான தீவிர நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கட்டுரைத் தொடர்பில் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள சங்கக்கார, இது மிகவும் அருமையான கற்பனை, ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்திடன் தொடர்புடைய கட்டுரையை நேற்று பதிவேற்றம் செய்திருந்தது
குறித்த செய்திடன் தொடர்புடைய கட்டுரையை நேற்று பதிவேற்றம் செய்திருந்தது
Post a Comment