Header Ads



அம்ஹர் மௌலவியின் நேர்காணல், ஒளிபரப்பாவதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது

சிங்கள மொழி மூலமான அததெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளர், சத்துர அல்விஸ்  அம்ஹர் மௌலவியை நேர்காணல் செய்திருந்தார்.

குறித்த நேர்காணல் முஸ்லிம்களிடத்திலும், சிங்களவர்களிடத்திலும்  குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தியிருந்தது.

அம்ஹர் மெலளவியின் நேர்காணல் பதிவு செய்யப்பட்ட பின்னர், அதனை ஒளிபரப்பாமல் தடுக்கவும், நிறுத்தவும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்த அறிய வருகிறது.

எனினும் இதற்கு சத்துர தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் குறித்த நேர்காணல் கட்டாயம் ஒளிபரப்பப்பட வேண்டுமெனவும் வாதிட்டதாக அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.