Header Ads



பயங்கரவாதத் தாக்குதலுடன், முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை - சில அடிப்படைவாதிகளுக்கே தொடர்பு

பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறிப்பிட்ட சில அடிப்படைவாதிகளே சம்பந்தப் பட்டிருப்பதாகவும் நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இதில் தொடர்புபடவில்லை எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சகல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டு வருவதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

தற்கொலை குண்டு பயங்கரவாதத்தை முஸ்லிம் சமுகத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும் பேராயர் இல்லத்திலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள விசேட செய்தியிலே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்ட அடிப்படையிலே  மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைப்பு ரீதியாக சிறியதொரு குழுவே இதனை மேற்கொண்டுள்ளது. அவர்கள் சாதாரண முஸ்லிம்கள் அல்ல. திசைமாறித் திரியும் அடிப்படைவாத குழுக்களாவர். மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்து அவர்கள் இந்தக் குற்றச் செயல்களை ஆரம்பித்தனர். இது கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்தும் அமைச்சர் கபீர் ஹாசிமின் முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளர் மீதும் இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

(எம்.ஏ.எம். நிலாம்)

2 comments:

  1. good comments mr prine minister

    ReplyDelete
  2. muslimgalin thatkapukaha waitha aidhathaim parithu witterhal. muslimgaluku nalaiku pirachinai andral anna saiwadhu. ungal singala inathin aidhangalai kalaiungal gun waal pondradhai parithu adungal. dharga townil muslim pengal rape kedukapattaner awarhalin edhirkalam karudhi adhai moodi maraithaner matrum thupaki shootuku ilakaha maranithaner ain innum kaidhu seyyawillai aidhangalai kalaya willai muslimuku orun niyayam sinhalawaruku oru niyayama? dhiganawarai muslimgaluku ilapey mingiyadhu

    ReplyDelete

Powered by Blogger.