Header Ads



முஸ்லிம்களை எப்படிக் கையாளுவது..? மனோ கனேசன் கேட்கிறார்

- Mano Ganesan -

எனக்குள் ஒரு கேள்வியும், விடைகள் பலவும் உள்ளன. எது சரி?

"வரலாற்று வேட்டுகள் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் வடுக்களை விதைத்தே விட்டன.

 யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட இன்று, அன்பார்ந்த இஸ்லாமிய-முஸ்லிம் சகோதரர்களை எப்படி கையாளுவது? அவர்களிடம் என்ன கூறுவது?"

1)தமிழை பேசினாலும், தனியான ஒரு இனமாக "நாம் முஸ்லிம்களே" என தம்மை அடையாள படுத்தி கொண்டுள்ளோரை, உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள். எங்கெங்கே முடியுமோ, ஆங்காங்கே கூட்டாக செயற்படுவோம், என்பதா?

2)இஸ்லாமியம் என்பது ஒரு மதம். அது இன அடையாளம் அல்ல. ஆகவே தமிழை பேசுவதால், "நாம் தமிழரே" என்போர் இணைந்து கொள்ளுங்கள்/செல்வோம், 
என்பதா??

3)அல்லது வழமை போல் "தமிழ் பேசுவோர்" என கூறி திரிவதா?

(இந்த ஆரோக்கியமான கருத்தாடலில் நுழைந்து இன, மத வாதம் கக்க வேண்டாம்!!!)

21 comments:

  1. அய்யா மனோ கணேசனவர்களே
    உங்களுக்கு முஸ்லீம்களை கையாள வேண்டிய தேவை என்னவென்று சொல்ல முடியுமா

    ReplyDelete
  2. இது விடை காணமுடியாத பில்லியன் டாலர் கேள்வி.

    ஆனால், ஒரு சின்ன உதாரணம்:- தமிழ்நாட்டு முஸ்லிம் மக்கள் தம்மை “இஸ்லாமிய தமிழர்கள்” என்கிறார்கள். மற்றய தென் இந்திய மாணிலங்களிலும் அப்படியே.
    ஆனால், இலங்கை முஸ்லிம்களும், வட இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் தம்மை “முஸ்லிம் இனம்” என அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர்.

    எனவே, இலங்கையில் தமிழ்-முஸ்லிம், சிங்களம்-முஸ்லிம் என பல கலவரங்கள் நடந்துள்ளன, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம், கிழங்கில் ltte, ஜிகாத் என பல படுகொலைகள் நடந்தன.
    வட இந்தியாவில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் பல நடந்து, பல ஆயிரக்கணக்கில் மக்கள் படு கொலைகள் செய்யப்பட்டனர். குஜராத், அயோத்தி என பல.

    ஆனால், தமிழ்நாடு உட்பட, தென் இந்தியாவில் இப்படியாக ஒன்றும் நடைபெறவில்லை, எல்லா தமிழர்களும் (இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்) ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

    ReplyDelete
  3. Mr. Minister..

    Where was the same feeling ? when LTTE chasted muslims out of NORTH withing few days considering us as a community of same language even though we spoke same language?

    After all happened 2 million People kicked out JAFFNA leaving almost everything back.. and No one considered us as TAMIL SPEAKING community
    at that time.... Do you expect us to fall in the same pit again?

    Thanks for your concern toward Muslims.

    May Allah Guide you to worship your real creator.

    ReplyDelete
  4. மனோ கனேசன் அவர்களே 1990 ம் ஆண்டுக்கு முன் இரு தரப்பு மக்களும் ஒண்றாக,ஒரே மொழி பேசும் மக்கள் எனும் உணர்வுடந்தான் வாழ்ந்தோம்.அந்த வாழ்க்கையை நிர்மூலமாக்கியது விடுதலை புலிகள் என்பது அனைவருக்கும் தெரியும்.வடக்கிலே Muslim களை விரட்டியது,கொலை செய்தது,கிழக்கில் எத்தனையோ ஊர்களில் பள்ளி வாயல்கலில் இறைவனக்கதில் ஈடுபட்டவர்கலை சுட்டுக்கொன்ரது,பல Muslim ஊர்களில் புகுந்து சிறுவர்,பெண்கள் என பாராமல் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்தது.,எத்தனையோ Muslim கள் அயலில் உள்ள தமிழ் கிராமங்களை கடந்து செல்லும் போது காணாமல் ஆக்கப்பட்டது.இது போல் எவ்வளவோ பாசிச வெறி பிடித்து அவர்கள் செய்த அட்டூலியங்கல்.இவையல்லாம் நீங்கள் என்னவெண்டு அழைப்பீர்கல்.ஒரு மொழி பேசும் சகோதரர்கள் எனவா? Muslim கள் வேறு ,நீங்கள் வேறு எனவா? ஆயுதம் ஏந்தாத நிராயுதபனிகலான Muslim களை கொத்து கொத்தாக அவர்கள் கொலை செய்த நோக்கம் என்ன? யார் ஆரம்பித்து வைத்தது இந்த ஒரு மொழி பேசிய மக்களை இரு சாமந்தரக் பாதைகளில் பயணிப்பதர்க்கு.இப்போது கூட இந்த செய்தித் தளத்தில் நான் பதிவிடுவது இரு மாதமலவில் மட்டும்தான்.ஆனால் முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் கடந்த பல மாதங்களாக மிகவும் கீழ்த்தரமான,கழிசரைத்தனமக எமக்கு எதிரன கர்த்துக்கலை பதிவிட்டார்கல்.அதை சகித்துக் கோள்ல முடியமால்தான் நானும்,இன்னும் சில சகோரர்கலும் பதிவிட ஆர்ம்பித்தோம்.ஆக பெரும்பாண்மை சிங்களவர்கள் எம்மை அடக்கி ஆளுகிரார்கல் என ஆயுதம் தூக்கி போராடிய அவர்கள் ஆயுதமே இல்லத ஒரே மொழி பேசிய,ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்த எம்மை தாக்கியது மறக்கமுடியாத,மன்னிக்க முடியாத,காலத்தால் அழியாத குற்றம்.எனவே திரு.மனே கனேசன் அவர்களே உங்களின் மூனு கேள்விகளில் முதலவதுதான் எமக்கு சரியாகப் பொருந்தும்.

    ReplyDelete
  5. முஸ்லிம் நண்பர்களே தயவு செய்து இந்த விவாதத்தில் உங்கள் தரப்பு எதுவாகினும் சீரிஸாக பங்கு பற்றுமாறு நட்புடன் கோருகிறேன். தொண்டைமான் செல்வநாயகம் நாட்களில் உருவான மலைய இலங்கை தமிழர் உறவு உலகமயமாதலின் விழைவாலும் தேசிய இந்து சமுத்திர் சர்வதேச அழுத்தங்களாலும் தீவிரம் அடைந்துள்ளது. தோழன் மனோகணேசனை தமிழர்பலர் குறிப்பாக கிழக்கு தமிழர்பலர் தங்கள் தலைவராக பேசுவதை கேட்டு ஆச்சரியபட்டிருக்கிறேன். இன்றைய சூழலில்
    இலங்கை மலையக தமிழருக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் நல்லுறவுக்கான அடிப்படைகளை உருவாக்குதல் அவசியம். ஒருங்கிணையும் தமிழருக்கும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு முஸ்லிம்களுக்குமிடையில் உறவுப்பாலங்களை நாம்தான் கட்டி வலுப்படுத்தவேண்டும். தமிழ் பேசும் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நல்லுறவுக்கு உதவும் வகையில் மனம்திறந்த விவாதத்தை கோருகிறேன் - வ.ஐ.ச.ஜெயபாலன்

    ReplyDelete
  6. சிங்களத்தினை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களை சிங்களவர்கள் என அழைப்பதாக?

    ReplyDelete
  7. அஜன் நீர்தான் ஆகக் கூடுதலான Muslim கலுக்கு எதிரன கீழ்த் தரமான கருத்துக்களை ஒரு வருடங்களாக பதிவிட்டீர்,சகிக்க முடியாமல் நாங்களும் பதி விட வேண்டிய சூழலுக்கு தள்லப்பட்டோம்.உம்மை போல முன்னால் புலி உறுப்பினர்கல்தான் இப்போது வட,கிழக்கிலே இரு சமூகங்களும் மிகப் பெரும் பகையுடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.ஆனால் இபோது உமது பதிவு வேறு விதமாக உள்ளது.சந்தர்ப்பவாத பச்சோந்தியாக இருக்காதீர்.

    ReplyDelete
  8. "(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்."
    (அல்குர்ஆன் : 16:125)
    www.tamililquran.com

    முஸ்லிம்களைக் கையாள இலகுவான வழி இஸ்லாத்தில் நீங்கள் நுழைந்து எங்கள் சகோதரர்களாகி விடுவதுதான்!

    அப்போது மொழியும் பிறவும் நமக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தாது.

    இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் நீங்கள் நுழைய உங்களைத் தடுக்கும் காரணம்தான் யாதோ?

    ReplyDelete
  9. அஜனுக்கு
    அடி நுனி தெரியாத, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் உமக்கெல்லாம் விவாதம் எதற்கடா.
    ஜெயபாலன் ஐயாவுக்கு
    உங்கள் உளவியலை ஆழமாக அவதானித்து வருகின்றோம். வாழைமரம் ஏற இனியும் தயாரில்லை ஐயா. சூடு கண்டபூனை அடுப்பங்கரையை நாடாது.

    ReplyDelete
  10. முஸ்லிம்கள் என்ன மொழியை பேசினாலும் முஸ்லிம்கள்தான். அவர்களிடம் முடியுமானவரை ஒதுங்கி இருப்பதே மற்றவர்களுக்கு நன்மை பயக்கும்.

    ReplyDelete
  11. ஐயா மனோ கணேசன் அவர்களே! முஸ்லிம் அல்லது இஸ்லாமிய அரசியலில் பல பிரச்சினைகள் கெடுபிடிகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக இஸ்லாமிய தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய முஸ்லிம்கள் என்று எங்களைக் கூறு போட முனையும் உங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அல்லது சேர்ந்து அரசியல் செய்வதற்கு இலங்கை முஸ்லிம்களால் எப்படி முடியும். இதுவரை உங்களைப்போன்ற தமிழ்த் தலைமைகள் கிறிஸ்தவரகளை நோக்கி; கிறிஸ்தவ தமிழர்கள் மற்றும் கிறிஸ்தவ வேதக்காரர்கள் என்ற பதங்களைப் பாவித்தது உண்டா? முஸ்லிம்கள் உங்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரமாகவா போய்விட்டார்கள். 1948 லிலிருந்து இன்றைய செக்கன் வரையும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்புகள் மிகவும் இறுக்கமடைந்து காணப்படுவதற்கு காரணம் யார் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இல்லையென்று நீங்கள் கூறினால் வரலாறு தெரியாதவராகவே நீங்கள் சமூகத்தில் இனம் காட்டப்படுவீர்கள். எங்கள் உரிமைகளை தமிழர் சமுதாயம் மறுத்ததை அல்லது பறித்ததை ஒரு பக்கம் வையுங்கள். சிறு சிறு சலுகைகளை கூட விட்டுத்தரமுடியாத ஒரு கூட்டத்தவர்களுடன் முஸ்லிம்களே வந்து சேருங்கள் என்று கூறுவதற்கு உங்களுக்கு எப்படித் துணிவு ஏற்பட்டது என்பதை நினைக்கும்போது அது எங்களுக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது. ஏத்தனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் புத்திஐPவிகளை அழித்து ஒழித்த சமுதாயத்தில் இருந்து கொண்டு இத்தகைய வினாவினை முஸ்லிம்களிடம் கேட்பதற்கு எப்படி உங்களுக்குத் துணிவு ஏற்பட்டது. இன்றைய முஸ்லிம் மக்களுக்கு யாரும் அரசியல் தலைவர்களாக இருக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை. முஸ்லிம்கள் காலத்திற்கு ஏற்றவாறு தம் நிலைப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லது தலைமைகளை தேர்வு செய்வார்கள். எமது சகோதரர் Rizard அவர்களுடைய கருத்தை நானும் திருப்பிக் கூறத் தேவையில்லை. யாரும் எங்களுக்கு அரசியல் பாடம் எடுக்க வேண்டிய அவசியமுமில்லை. “சும்மா” கேட்க விரும்புகின்றேன். இந்த மாபெரும் ஐடியாவை உங்களுக்குத் தந்தது யார்? ஐயபாலன் ஐயா அவர்களா?

    ReplyDelete
  12. யாழ்மையவாத கருத்துக்களே முழு இலங்கை மக்கள் பிரிவினைக்கும் காரணம். இங்குள்ள வடக்கு தமிழர்கள்(மேல் தட்டு அல்லது மேல் ஜாதி என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள்)சுதந்திரத்திற்க்கு முன்னுள்ள தமது நிலையினை (கல்வி, பொருளாதாரம் மற்றும் ஆளும் வர்க்கம்) தொடர்ந்தும் தக்கவைப்பதற்க்காக, சுதந்திரத்தின் பின் வேகமாக எழுச்சியடைந்த சிங்கள மேல் தட்டு பூர்சுவாக்களுடன் கடுமையாக முரண்பட்டனர்.இதன் விளைவு எதுவாக இருக்குமோ அதுவாக இன்றுவரை இருக்கிறது.
    ஆனால் இது ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சனையல்ல. வடக்கு யாழ்பாணிகளின் தேவைக்காக கிழக்கு தமிழ்பேசும் சமூகம் பகடைக்காய் ஆகக்கூடாது.அதேபோல் தனியே தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்றில்லாமல் சமூகம் சார்ந்த அதே நேரம் தேசிய சிந்தனையுடன் செயற்படும் அரசியல் கலாச்சாரம் ஒன்றின் தேவை இப்போது கடுமையாக உணரப்படுகின்றது. காலம்கடந்துபோன இனரீதியான கட்சி சிந்தனைகள் இல்லாமலாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் "திராவிடம்" கேரலாவில் "மலையாழி" எனும் அடையால அரசியலே கோலோச்சுகின்றது என்பது கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். சீமானின் நாம் தமிழர் எனும் (மறைமுக ஒற்றைபடை ஏகாதிபத்திய) சித்தாந்தம் இங்கு பொருத்தமற்றது.

    ReplyDelete
  13. திரு.மனோ கனேசன் அவர்களே,நீங்கள் ஆரம்பித்த கேள்விக்கு எமது கருத்துக்களை தந்துவிட்டோம்.தயவு செய்து எப்போதும் போல் மவுனமாக இருக்காமல் நீங்கல் இபோது உங்கள் கருத்தையும்,எனது முதலாவது பதிவில் நான் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளியுங்கள்.அப்படி இல்லாவிட்டால் மீண்டும் இவ்வாறான பதிவுகளையும்,எம்மீதான உங்கள் கரிசனையையும் விட்டுவிடுங்கள்.சகோதரர் suhood கூறியது போல் சீமான் போன்ரவர்கல் புலிகள் எமக்கெதிராக வெறியாட்டம் ஆடிய போது எங்கே இருந்தார் வேறு கிரகத்திலா.அவர் ஒரு வார்த்தை புலிகளுக்கு எதிராக ஏன் பேசவில்லை “எனது தமிழ் பேசும் சகோதரர்களை கொல்லவேண்டாம்,தாய் மண்ணில் இருந்து துரத்த வேண்டாம் என” அவருக்கு தேவை தமிழ் நாட்டு Muslim வாக்குகள்.ஆனால் அந்த நாட்களில் இப்போது போல் தகவல் தொழில் துறை வளர்ச்சி அடையவில்லை,எனவே தமிழ் நாட்டில் உள்ள எமது சகோதர Muslim கலுக்கு தெரியாது இங்கே புலிகள் செய்த கொடுமைகள்.ஆனால் இப்போது அவர்களும் கொஞ்ஞம் கொஞ்ஞமாக தெளிவு அடைந்து உள்ளார்கள்.தம்பி குமார் நீங்கள்தான் எம்மோடு சேர வேண்டும் என புலம்புகிரீர்கல்,உங்கள் நிகழ்கால சுய தேவைகளுக்காக,தேவை முடிந்ததும் கைகலுவி விடுவீர்கள்.அதனால்தான் எப்போதோ நாங்கள் உங்களை விட்டு விலகி விட்டோம்.நீங்கள் வரலாறை முதலில் படியுங்கள் உங்களுக்கு முதல் சிங்களவர்கள் எமக்கு எதிராக 1915 ல் கலவரத்தினை ஆரம்பித்த போது அன்ரைய பிரித்தானிய ஆட்சியாளர்களால் அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கே England ல் நடந்த வழக்கில் ஒரே மொழி பேசும் சகோதரனுக்கு எதிராக வாதாடிய வக்கீல் யார் தம்பி குமார் ஜெயபாலன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.முதலில் துரோகத்தை ஆரம்பித்தது 1915 ல் நீங்கள்.அதையும் மறந்து விட்டு மீண்டும் புலிகள் இயக்கம் ஆரம்பித்த போது Muslim இழைஞ்ஞர்கல் உங்கலோடு இணைந்தார்கள்,எமது வர்த்தகர்கள் உணவில் இருந்து பணம் வரை உதவினார்கள்,எமது தாய்மார்கள் தமிழ் வாலிபர்கலை தங்கள் வீடுகளில் ஒழித்து வைத்து பாதுகாத்தார்கள்.ஆனால் புலிகள் பலம் பெற்றவுடன்,எம்மை அளிக்க ஆரம்பித்தார்கள்.எனவே “வரலாறை படியுங்கள் மீண்டும்” நாங்க துரோகிலா அல்லது உங்கள் தேவைகள் முடிந்தவுடன் நீங்கள் எமக்கு துரோகம் செய்தீர்கலா என்பதை வரலாறு உங்களுக்கு சொல்லித்தரும்.எனவே எமக்கும்,எமது எதிர்கால சந்ததிகலுக்கும் வேண்டாம் மீண்டும் உங்களின் துரோகமும்,ஒரு மொழி பேசும் சீமான் போன்ரவர்கலின் அரசியில் லாப சகோதர உறவும்

    ReplyDelete
  14. Lafir, Rizard போன்றவர்களுக்கு உண்மைகள் கசக்கின்றன போலும்

    ReplyDelete
  15. முஸ்லிம்கள் தமிழை எதிர்பவர்களாக இருந்திருந்தால் என்றோ முஸ்லிம் ஊர்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார்கள். அப்படியும் ஏன் இந்த நிலையென்றால் அதற்க்கு முக்கிய காரணம் துவேசம் பிடித்த இலங்கை தமிழ் அடிப்படைவாதிகள் தான். பொன்னம்பலம் ராமநாதன் என்கிற இனவாதி சிங்கள இனவாதிகளோடு எவ்வளவு ஆட்டம் போட்டான் என்பதை மனோகணேசன் போன்ற இழிவான அரசியல்வாதிகள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதும் தேவையிருந்தால் முஸ்லிம்களை நயவஞ்சக தனமாக ஏமாற்ற முஸ்லிம்களை தமிழர்கள் என்பீர்கள். காரியம் ஆனபிறகு கழட்டிவிடுவீர்கள். பிரபாகரனும் அதைத்தானே செய்தான் ஆகவே மனோ கணேசன் போன்ற நயவஞ்சக அரசியல் கோமாளிகள் முஸ்லிம்களை பற்றி கவலைகொள்ள தேவையில்லை. முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருந்துவிட்டு போகட்டும். எம் தாய் மொழியான தமிழை நாம் பாதுகாத்துக்கொள்வோம். முதலில் 200 வருடங்களாக அடிமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் உங்கட இனத்திற்கு உருப்படியாக எதையாவது செய்யுங்கள் முஸ்லிம்களுடையதை பிறகு கழுவலாம்

    ReplyDelete
  16. அஜன் நீர் எங்கே உண்மை பேசுகிரீர்? நீர் பேசுவதெல்லாமே இனவாதம்.கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக உமக்கு ஒரு வகையான பாசிச வெறி பிடித்து அலைகின்ரீர்.விரைவில் அதற்க்காக ஏதாவது சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.இல்லாவிட்டால் அரசும்,நீதிமன்ரமும் உமக்கு தகுந்த சிகிச்சை வழங்குவார்கள்.

    ReplyDelete
  17. ஐயாவின் கேள்விகளினூடாக விடைகளையும் நீங்களே கூறிவிட்டு வாசகர்களுக்கு வாசகர்களுக்கு உங்கள் மீது ? யை வைத்துள்ளது உங்கள் தனித்திரமையை காட்டுவதுடன் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்பதையும் தெளிவு படுத்தி உள்ளது
    2 வதான கேள்வியில் "இணைந்து கொள்ளுங்கள் செல்வோம்" எனும் பொழுது முஸ்லிம்களே இணைந்து வர வேண்டும் முஸ்லீம்களுக்கு விமோசனம் பெற்றுத்தர தமிழர்களால் முடியும் .. என்னும் மனோநிலையுடன் ஐயா இருப்பது தெளிவு
    3 வது கேள்வியில் "வழமைபோல் பேசித்திரிவதா"என்பதன் மூலம் தமிழ் பேசுவதன் மூலம் ஒன்றுபட்டு வாழமுடியாது எனும் உங்கள் மனோ நிலை வெளிப்படையாக உள்ளது ..ஆக எது எப்படியோ முஸ்லீம்கள் இந்த மனோநிலையில் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
    நாம் மொழியை ஒரு ஊடகமாக கருதுவதுடன் அதுவே உண்மையும் கூட
    வேற்றுமைகளுடன் ஒற்றுமையாக வாழ்வதையே முஸ்லீம்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வர் அதற்கு உடன்படுவத்தில் பலருக்கு இருக்கும் ஐயப்பாடு என்றும் எமக்கு இல்லை என்பதை ஐயா விளங்கிக்கொள்ள வேண்டும் ...அய்யாவுக்கு இந்த சந்தேகமும் தெளிவும் கிறிஸ்தவர்கள் விடயத்தில் வராதது ஏனோ? ஒரு இனத்தின் இருப்பும் அதன் அடையாளமும் அது கொண்டுள்ள ஆட்சி சார் வாக்குகளை கொண்டதாக அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள் எதிர்பார்ப்பர் ..நீங்கள் ஒரு சிறந்த அரசியல் வாதி என்பதை ஏற்றுக்கொண்டாலும் உங்களுடனேயே வாழும் ஒரு சகோதர இனத்தின் அபிலாஷை என்ன என்பதை நீங்கள் புரியாது confusion ஆக கேள்வி கேட்டு இருப்பது உங்கள் புலமையை நகைப்புக்குள்ளாக்கின்றது ஐயா!

    ReplyDelete
  18. எது கசப்பு!
    ₹ பள்ளிவாசலில் தொழுகையாளிகளை கொன்றதா?
    ₹ தூணாக நின்ற ரஜீவ்காந்தியை குண்டுவெத்துக் குதறியதா?
    ₹ 24 மணிநேர அவகாசத்தில் உடுதுணியுடன் வடக்கிலிருந்து வெளியேற்றியதா?
    ₹ நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைக்கிழித்து குழந்தையைக் கல்லில் அடித்துக் கொன்றதையா?
    ₹ நித்திரையிலிருந்த மக்களை தீயிட்டுக் கொளுத்தியதையா?
    அஜன் இன்னும் 1000 அடுக்கலாம். வேம்பு தான் கசக்கும். ஆனால் உமக்கு அமுதும் கசக்கும். ஏனெனில் உமது தலையில் இருப்பது புலியின் பாசிசத்தில் பிசைந்து எடுத்த மூளையல்லவா!

    ReplyDelete
  19. Rizard, ok உங்கள் கடைசி comments புரிகிறது. தமிழர்கள் முஸ்லிம்களை கறிவேப்பிலை யாக கடந்த வரலாற்றில் பயன்படுத்தினார்கள் என்கிறீர்கள். Agreed.

    அதனால், தற்போது சிங்களவர்களுக்கு கறிவேப்பிலையாக பயன்பட்டுக்கொண்டிருக்பின்றீர்கள்.
    Good strategy. பெரும்பாண்மையிருக்கு பயன்படுவதால், பணம்-பதவிகளாவது லஞ்சமாக கிடைக்கும் தான்.

    சிங்களவர்களுக்கும் இது தெரியும், பசையிருக்கும் வரை தான் தங்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பீர்கள் என.

    ReplyDelete
  20. Mr. Kumar,

    முதல் வரியில் ஓர் முத்தான உண்மையைச் சொல்லியுள்ளதற்கு நன்றிகள் பல. உங்கள் அடுத்த வரிக்கு உங்களை படைத்தவனே பதிலளிக்கின்றான்:

    "மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை."
    (அல்குர்ஆன் : 6:26)

    ReplyDelete

Powered by Blogger.