மண்டியிட்டுள்ள முஸ்லிம் உரிமையும், மாகாணக் கொடியும் - களத்தில் குதிப்பாரா ஹிஸ்புல்லா...?
இலங்கையின் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் அதன் அடையாளமாக கொடிகள் உள்ளன, அந்த வகையில் கிழக்கு மாகாணமும் தனது கொடியில் மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அடையாளக் குறியீடு களைக் கொண்ட கொடியைக் கொண்டிருக்கின்றது, ஆனால் அதில் அங்கு வாழும்மக்களின் அடையாளம் மறுக்கப் பட்டிருப்பதை பற்றியே. இப்பதிவு ஆராய்கின்றது,
#கிழக்கு_மாகாணம்,
இலங்கையில் சமய ரீதியாக , முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ஒரே ஒரு மாகாணம் கிழக்கு மட்டுமே, இதில், தமிழர்கள், சிங்களவர்கள் போன்றோரும் வாழ்ந்தாலும் 2012 சனத்தொகை கணிப்பின் படி முஸ்லிம்கள் சமய அடிப்படையில் பெரும்பான்மையாக உள்ளனர்.அதாவது, 575,936, முஸ்லிம்களும், சமய சதவீதம் 37.12% ஆகவும், உள்ளனர்
#நிர்வாக_மாவட்டங்கள்,
கிழக்கு மாகாணம் 3 நிர்வாக மாவட்டங்களை கொண்டுள்ளது, அவை AMPARA, BATTICALO,& TRINCOMALEE, என்பனவாகும், இதில் அம்பாறை ,மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தழிழர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர், அதாவது குறித்த மாகாணத்தின் மூன்றில் இரண்டு மாவட்டங்களில் முஸ்லிம்களும், ஒரு மாவட்டத்தில் தமிழர்களும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர், எங்கும் சிங்களவர்கள்,ஏனையோர், பெரும்பான்மையாக இல்லை,
#மாகாணக்_கொடி,
கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்கும் அடையாளமான கொடியில் பல குறியீடுகள் உள்ளன, அவை #மீன், #பருந்து, #சிங்கம், என்பனவாகும், சுற்றிவர பின்னணியில், , சூரியனையும்,நீலம், மஞ்சல், வுரௌன், கலர்களையும் கொண்டுள்ளது, 2007 May 22 அன்று இக் கொடிஅங்கிகரிக்கப்பட்டு, அவ்வேளை ஆளுனராக இருந்த மொஹான் விஜய விக்கிரம அவர்களால் உத்தியோக பூர்வமாக்கப்பட்டது,
#குறியீடுகள்,
குறித்த கொடியில் உள்ள மூன்று உருவங்களும், குறித்த 3 மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, அதன்படி, மீன் மட்டு ,மாவட்டத்தையும், திருமலையை பருந்தும்,
அம்பாறையை சிங்கமும், அடையாளப் படுத்துகின்றன,,
#முக்கியத்துவம்,
ஒரு நாட்டின் கொடிக்கு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ,எந்தளவு மதிப்பும் ,கௌரவமும், அடையாளமும் வழங்கப்படுகினறதோ, இதே போல உள்நாட்டிலும், சில வேளைகளில் வெளி நாடுகளிலும் மாகாணக்கொடிக்கு முக்கியத்துவம் உண்டு, மாகாணப்போட்டி, பரிபாலனம், அடையாளம், நிர்வாகம் போன்றவற்றிலும் இக்கொடி முக்கியத்துவம் பெறுகின்றது,
#புறக்கணிப்பு,
இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள், ஆனால் எந்த மாகாணக் கொடியிலும் அவர்களது அடையாளம் பொறிக்கப்படவில்லை, ஆனாலும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட "#கிழக்கு_மாகாணக்_கொடி" யிலும் முஸ்லிம்களின் எந்த அடையாளமும் இல்லை என்பது, மனவருத்தமான விடயம் மட்டுமல்ல ,மானக்கேடானதுமாகும்,
#தமிழர்_அடையாளம்,
மட்டக்களப்பு ,மாவட்டத்தில் 381,884 தமிழர்கள் வாழ்கின்றனர் ,அவர்களே அம் மாவட்ட ரீதியான பெரும்பான்மை மக்கள், அங்கு அவர்களின் அடையாளமான "#பாடும்_மீன்" குறியீடாக்கப்பட்டிருக்கின்றது, அதே போல் வடக்கு மாகாணக்கொடி தமிழ் மக்களின் அடையாளமாகவே அமைந்து, காணப்படுகின்றது,
#இது_நியாயமா, ??
கிழக்கு மாகாணத்தில், அம்பாறை ,மற்றும் திருக்கோணமலை, மாவட்டங்களைக் குறிப்பிடும் அடையாளங்களில் "#முஸ்லிம்_சார்_அடையாளம் புறக்கணிக்கப்பட்டு , பருந்தும், சிங்கமும், இடம்பெற்றிருப்பது எந்தவகையிலும் ஏற்க முடியாத ஒன்று, இது யாரும் பிரதிநிதித்துவம் செய்கின்றது
அம்பாறை மாவட்டத்தில், 2,82484, முஸ்லிம்களும், 2,51018 சிங்களவர்களும், 1,12750 தமிழர்களும் உள்ளனர், கல்முனை தலைநகராகவும் உள்ளது, இந் நிலையில் "#சிங்கம்" அடையாளமாக்கப்பட்டிருக்கின்றது, "
திருகோணமலை மாவட்டத்தில், முஸ்லிம்கள் 1,52854 பேரும், தமிழர்கள் 1,15549 ம், சிங்களவர்கள், 101991 மாக உள்ளனர், ஆனால் குறியீட்டில் "#பருந்து" உள்வாங்கப்பட்டுள்ளது, அந்தவகையில் தமிழ் மக்கள் தமது பெரும்பான்மை மாவட்டத்தில் தமக்கான "அடையாளத்தை" உறுதிப்படுத்தி உள்ளனர், ஆனால் இங்கு வாழும் முஸ்லிம்கள் தவற விட்டுள்ளனர்,
#யாருடைய_பிழை, ??
உண்மையில் ஒரு மாகாணத்தின் அடையாளம் அங்கு வாழும் மக்களைப் பிரதிபலிக்க வேண்டும், அதனை அரசு கவனத்தில் கொள்ள மறுக்கும் சந்தர்ப்பங்களில் மக்களின் பிரதி நிதிகளான அரசியல் தலைவர்கள் போராடிப் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும், ஆனால் இங்கு எதுவும் இடம்பெற வில்லை, குறித்த மாகாண ஆட்சியில், முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும், பிரதிநிதிகளாகவும் இருந்த அனைவரும் ,மக்களின் ஒரு உரிமைக் குரலை வெளிக் கொணரத் தவறி உள்ளனர்,
#இருப்பியல்_அடையாள_மறுப்பு,
இவ் விடயம் வெறும் குறியூயீடுகளுடனான பிரச்சினை அல்ல ,மாறாக ஒரு சமூகத்தின் இருப்பியல் அடையாள மறுப்பாகும், இலங்கையின் எந்த மாகாணத்திலும் ,முஸ்லிம் அடையாளம் இல்லாத சூழலில், பெரும்பான்மையாக வாழும் கிழக்கிலும் அது மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று, மட்டுமல்ல இம்மாகாணத்தில் அடிக்கடி இடம்பெறும் இனமுறுகல் சம்பவங்களுக்கும் இது காரணமாக அமைகின்றது,
#தமிழரின்_முன்_உதாரணமும், உதவியும்,,
அந்த வகையில் தமிழ் மக்கள் தாம் மாகாண ரீதியில் பெரும்பான்மை யாக வாழும் வடக்கு மாகாணக் கொடியிலும்,மாவட்ட ரீதியில் பெரும் பன்மையாக வாழும் மட்டக்களப்பிலும் தமது அடையாளத்தைப் பதித்துள்ளனர், இது பாராட்டுக்குரியது,
மட்டுமல்ல இந்த அடையாள நிறுவலை மேற்கொள்ள கிழக்கு மாகாண முஸ்லிகளுக்கும் உதவி புரிய வேண்டும், அதுவும் இன உறவுக்கான நல்லுதாரணமாகவும் அமையும்
#என்ன_செய்யலாம்,?
இப்பிரச்சினையை அவசரமாகவும், அவதானமாகவும், அரசியல் வாதிகளிடமும், சமூக இயக்கங்களிடமும் முன்வைப்பதன் மூலமும், அத்தோடு, தமக்கான ஒரு அடையாளக் குறியீட்டைப் பிரேரிப்பதன் மூலமும், பாரளுமன்றம் வரை போராட முடியும்,
#ஆளுனர்_அவர்களுக்கு...
புதிய ஆளுனராக நியமிக்கக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் முதலாவது. ஆளுனரான கலாநிதி ஹிஸ்புல்லா, அவர்களே! நீண்ட காலமாக அடையாளமின்றி வாழும் ,அம்பாறை, மற்றும் திருகோணமலை மக்களுக்கு மாகாண கொடியில் தமது அடையாளத்தைப் பிரதிபலிப்பதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்குமாயின், அதனை அவசரமாக நிறைவேற்றி தமிழ் மக்களைப் போல தமது அடையாளத்துடன் முஸ்லிம்களும் இக் கிழக்கு மாகாணத்தில் வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்,ஏனெனில் இதுவரை உரிமைக் கோசம் எழுப்பி எங்கள் வாக்குகளைப் பெற்று அரசியல் பதவிகளை அலங்கரித்தவர்கள் எங்களை நட்டாற்றில் விட்டு உள்ளனர், என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம்,,
இதனை நீங்கள் செய்வீர்களாயின்...,தமிழ் , பேசும் மக்களின் உணர்வினைப் பிரதிபலித்தது மட்டுமின்றி, இதுவரை, தமது அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட முஸ்லிம்களும் தமது அடையாளத்தைப் பெற உதவி புரிந்த பெருமையும் உங் களையே சாரும்..
(உங்களது ஆதங்கத்தையும், ஆலோசனையையும், பின்னூட்டலாக இடுங்கள்)."
#ஒன்றுபட்டுச்_சிந்திப்போம்_எம்_இருப்பின்_அடையாளத்தைப்_பாதுகாப்போம"
MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
UNIVERSITY OF PERADENIYA

Good idea
ReplyDeleteDon't worry Mr Hisbulla going to be change easten province flag to green
ReplyDeleteStar and quter moon
Hisbullah will say that he would had not known the Eastern province has a flag.
ReplyDeleteit is a good initiative and it should be done with consultation of all academics, social and political figures.
ReplyDeleteஉண்மை தான்
ReplyDeleteஆனால் இந்த சந்தர்ப்பத்தில் இது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
இதையும் இனவாதிகள் இனவாத கண் கொண்டு பார்ப்பார்கள்.......
அங்கு ஏற்கெனவே ஹிஸ்புல்லாஹ்வின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் நிலையில் இருக்கிறது.
அட போங்கையா நீங்களும் உங்க இதுவும் எப்பவும் முட்டையிலையே மயிர் புடுங்குற மாதிரியே இருக்க வேணாம். முபிசால் அபூபக்கர் நீ ஒரு சீனியர் லெக்சர் தானே படிச்சவன் தானே நீயே இப்படி முட்டாள் தனமா பேசினா படிக்காதவன் என்ன செய்வான். நல்ல ஆக்க பூர்வமான விஷயத்துக்கு மூளைய பாவவிக்கலாமே சும்மா சின்னப் பிள்ளை மாதிரி சீ…..
ReplyDeleteஇல்ல நான் தெரியாமத்தான் கேக்குறன் ஒரு கொடியவச்சிட்டு நீ என்னதான் பண்ணுவ இதவிட பேச எவ்வளவு முக்கியமான பிரச்சனை எல்லாம் இருக்கு. இப்பதான் ஒருத்தன் பதவியிக்கே வந்திருக்கான் ஆற அமர இதெல்லாம் பார்க்கலாமே அதையும் விட இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல அந்நதக் கொடியில பிறை நட்சத்திரம் வந்தாலும் சரி வராட்டியும் சரி நடக்குறது நடந்துதானே ஆகனும்.
இப்போ சும்மா யோசிச்சுப் பாரு இந்தக் கொடியில முஸ்லிமோட அடையாளம் இல்லாட்டி கிஸ’புல்லாக்கு நிர்வவாகம் பண்ண முடியாதா
மத்தது நான் ஒன்ன கேக்கனும் அது என்னடா ஆ…ஊன்னா முஸ்லிம் எங்குறீங்க நீங்க இலங்கையில தமிழும் சிங்களமும் தானேடா பேசுறீங்க அப்டீன்னா எக்குடா சமயத்த ஒரு இனமா சொல்லுறீங்க ? இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம் அது இனம் இல்ல கிறீஸ்தவம் ஒரு மார்க்கம் அது இனம் இல்ல ஆளாளுக்கு சமயத்த இனமாக்கிக்கிட்டா இல்கையில இன்னும் நிறைய பிரச்சனை வரும்டா தயவு செய்து புரிஞ்சுக்கோங்கடா !!
உலகத்தில எங்கையுமே இல்லாத புது விஷயத்த நீங்கதாண்டா கண்டு புடிச்சிருக்கீங்க. ஒரு உதாரணத்துக்கு தமிழ் நாட்டப்பாருங்க அங்க எந்த முஸ்லிமும் தமிழன் என்னுதான் சொல்லுவவான் தயவு செய்து உங்கட சமயத்த இனமா சொல்லுறத நிறுத்து;கடா படிச்ச முட்டாள்களே……