அணில் குஞ்சால் ஏற்பட்ட விபத்து - 3 பேர் படுகாயம் - களுவாஞ்சிக்குடியில் சம்பவம்
களுவாஞ்சிகுடியில் இன்று -25- காலை இடம்பெற்ற விவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் வீதியைக் குறுக்கறுத்துச் சென்ற அணில் குஞ்சுக்கு வழிவிடுவதற்காக சடுதியாக பிறேக் பிடித்துள்ளார்.
இந்நிலையில் செட்டிபாளையம் பகுதியிலிருந்து வயலில் பூசை செய்வதற்காக பூசைப் பொருட்களுடன் பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தானர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளும் சேதடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் பெரும் சேத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முள்னெடுத்துள்ளனர்.

அனில் குஞ்சா குட்டியா? அப்போ ஆட்டுக்குஞ்சு மாட்டுக்குஞ்சு தானோ?
ReplyDeleteகிளிக்குட்டி புறாக்குட்டியா?