Header Ads



மாவனல்லையில் சிலையை, உடைத்தவர்கள் எங்கே...?


நாட்டில் குழப்பநிலையொன்றைத் தோற்றுவிப்பதற்கான கருமேகங்கள் கருக்கட்டியிருந்த மாவனல்லைப் பிர தேசத்துக்கான விஜயத்தின் முதல் அம்ச மாக ஹிங்குலவில் சேதமாக்கப்பட்ட தெருவோர புத்தர் சிலையைத் தரிசித் தோம். மஞ்சள் புடவையினால் போர்த் தப்பட்டிருந்த சிலையை பெருப்பித்திக் கட்டும் வேலையில் இருவர் ஈடுபட்டி ருந்தனர். இப்படித்தான் மாவனல்லைப் பிரதேசங்களில் சிலைகள் சேதமாக்கப் படுவதும் பின்னர் அவை பெருப்பித்துக் கட்டப்படுவதும் நடக்கின்றது என்பதை மாவனல்லை பஸ் தரிப்பிடத்தில் முன் னைய காலங்களில் சேதமாக்கப்பட்ட ஒரு சிலை பிரமாண்டமாய் வளர்ந்திருப் பதை வைத்து நாங்கள் அறிந்து கொண் டோம்.

நாங்கள் ஊடகவியலாளர்கள் என்று சிலை நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந் தவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் தொல்பொருள் திணைக் களத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் பதிலுக்குச் சொன்னார்கள். இது ஒரு தொல்பொருள் இல்லையல்லவா என்று கேட்டோம். இல்லை, எங்களுக்கு இந்த வேலையைச் செய்யச் சொன்னார்கள் என்று சொல்லி விட்டு நழுவ, நாங்களும் நழுவினோம். அரசாங்கம் முன்னெடுக் கும் ஏனைய நடவடிக்கைகளையும் பார்ப்பதற்காக.

மாவனல்லை சிலை உடைப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு இளைஞர்களையும் பற்றி ஊரில் விசா ரித்தவர்கள் எல்லோருமே அவர்கள் நல்லவர்கள் என்ற பொதுவான வார்த்தை யைத்தான் சொன்னார்கள். குகைவாசி கள் போலன்றி இவர்கள் பொது விட யங்களில் ஈடுபட்டு மக்களோடு மக்க ளாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்ராஹிம் மௌலவியின் பக்கத்து வீட்டுக் காரர் ஸபீர் இவர்கள் பற்றிச்    சொல்லும் போது, உடைந்து பழுதாகி யிருந்த எமது தெருவுக்கு கொங்கிரீட் போடுவதில் இவர்கள் தான் முன்னின்று உழைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து இந்த வேலையைச் செய்தார்கள். மௌலவி உடைய மகன் கள் நடத்திய அகீதா வகுப்புக்கு யாரையும் அவர்கள் பலவந்தப்படுத்தி அழைக்கவில்லை. அவர்களுடைய பாட் டில் அவர்கள் இருந்தார்கள் என்றார்.

எங்களை அழைத்துச் சென்ற முச்சக் கர வண்டிச் சாரதி நிஹால் அஹமட்    சொன்ன தகவல்களின் படி இந்தக் கைதுக்கு முன்னர் இவர்கள் பொதுவில் அறியப்படாதவர்களாகத்தான் இருந்தார் கள். இவர்கள் பற்றி வித்தியாசமாக அடையாளங் காட்டிச் சொல்வதற்கு எதுவுமே இருக்கவில்லை என்று சான்ற ளித்தார்.

இதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஸித்தீக்கிடம் விசா ரித்த போதும் அவரும் இதே கருத்தை யே முன்வைத்தார். அவர்கள் க்லாஸ் நடத்திக் கொண்டிருந்தார்கள். இடைக் கிடை ஹைக்கிங் செய்வார்கள். மற்றும் படி தீவிரமான எந்தச் செயற்பாடு களையும் இவர்களிடம் காண முடிய வில்லை என கைது செய்யப்பட்டுள்ள ஒருவரின் பெரியப்பா சொன்னார். இப் படி யாரிடம் விசாரித்தாலும் அந்த இளைஞர்கள் சம்பந்தமாக நற்சான்று களே வெளிவந்தன.

சிலை உடைப்புடன் சம்பந்தப்படுத் திப் பேசப்படுபவர்கள் அனைவருமே தெல்கஹகொட ஜும்ஆப் பள்ளிவாச லின் அங்கத்தவர்கள் என்ற வகையில் பள்ளிவாசலின் செயலாளர் இமாமுத் தீன் ஆசிரியரிடம் இவர்கள் பற்றி வினவினோம். பண்பாடுகளில் மோச மான பகுதிகள் எதுவும் இவர்களிடம் இல்லை. தீவிர சிந்தனை உடையவர்கள் என்பதை ஜமாஅதே இஸ்லாமி இவர் களைத் தமது ஜமாஅத்திலிருந்து விலக் கிய பின்பே தெரிந்து கொண்டோம்.

ஆனால் எந்த வகையான தீவிரத்தை அவதானித்து விலக்கப்பட்டார்கள் என் பதை யாரும் எங்களுக்கு அறியத் தர வில்லை. யாப்புக்கு முரணாக நடந்த தால் விலக்கப்பட்டதாகவே எமக்குச்  சொல்லப்பட்டது. எமக்குத் தெரிந்த வகையில் அவர்கள் தமது வீடுகளில் வகுப்புக்கள் நடத்தி வந்தார்கள். வெளி யிடங்களில் இருந்தும் இதில் யாரும் வந்து கலந்து கொண்டார்களா என்று எமக்குத் தெரியாது.

ஒரு முறை பள்ளிவாசலில் நான்கு நாள் நிகழ்ச்சியொன்றை தமது அங்கத்த வர்களுக்கு நடத்துவதற்கு இடம் கேட் டார்கள். நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம், தலைப்புக்கள் சம்பந்தமாக நாங்கள் விபரம் கேட்டோம். பின்னர் அவர்கள் அந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை. பள்ளிவாசலின் எந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் கொள்கை ரீதி யாகவோ ஏனைய வழிகளிலோ முரண் பட்டதும் கிடையாது. ஆனால் சக வாழ்வு தொடர்பில் பள்ளிவாசலின் செயற்பாடுகளில் அவர்களுக்குக் கடுமை யான விமர்சனம் இருந்தது. இவ்வளவு தூரம் இறங்கிச் செல்ல வேண்டுமா என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள்.

இது தவிர சிலைகளை உடைக்   கின்ற அளவுக்கெல்லாம் அவர்களிடம் தீவிரமான போக்கு எதனையும் நாங்   கள் அவதானிக்கவில்லை என்றார். தெல்கஹகொட பிரதேசத்தை உள்ளடக் குகின்ற இடம்பிட்டிய கிராம சேவகர் பிரிவின் கிராம சேவையாளர் தீபிகா ஜயவர்தன கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பகுதியில் கடமையேற்றிருந்தார். தனது அறிவுக் கெட்டியவரையில் தமது பிரதேசத்தில் எந்தத் தீவிரவாதக் குழுக்களும் இருப்ப தான தகவல்கள் இருக்கவில்லை என அவர் கூறுகிறார்.

மாவனல்லை முஸ்லிம்களுக்கும் சிங் களவர்களுக்கும் இடையிலான வரலாறு மிகவும் தொன்மையானது என்று கூறும் மாவனல்லை உதவிப் பிரதேச செயலா ளர் ரங்கன அத்தநாயக்க,  சிங்கள மன் னர்களுக்கு மருத்துவம் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் மருத்துவர்களுக்கு மன்னர்கள் இங்கு காணிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்கள். அவர்கள் இங்கு சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந் தார்கள். இன்றும் கூட முஸ்லிம்களு டைய பெயர்களுடன் சிங்களப் பெயர் கள் இணைந்திருக்கின்றன. அந்தளவு தூரம் சிங்கள முஸ்லிம் உறவு இங்கு பலமானது.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தி லிருந்து யாரும் புத்தரின் சிலையை உடைக்க வேண்டிய தேவை எதுவும் இங்கில்லை. யாராவது அப்படிச் செய்தி ருப்பார்களானால் அவர்கள் வெளிச்                சக்திகளின் தூண்டுதலாலேயே அவ் வாறு செய்ய முடியும். உலகில் அமை தியை நிலைநாட்டுவதற்கு உழைக்கின்ற சில என்ஜீஓக்களுக்கு அமைதியை நிலை நாட்டும் தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக நாடுகளில் குழப்பநிலையைத் தோற்றுவிக்கும் தேவையும் இருக்கிறது என்கிறார். இந்த வகையில் பார்த்தால் அவர்களுக்குத் தீவிரவாதத் தொடர்பு இருப்பதனை யாருமே உறுதிப்படுத்தவுமில்லை.  

இப்படி யாரைக் கேட்டாலும் இந்த இளைஞர்கள் இதனைச் செய்திருப்ப தற்கான வாய்ப்பில்லை என்று உறுதிப் படுத்துகிறார்கள் என்றால், மாவனல் லையில் என்ன தான் நடந்திருக்கும்?

கடுகண்ணாவப் பிரதேசத்தில்தான் இவர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டிருக்கிறார். தெல்கஹகொட யில் இருந்து சுமார் 07 கி.மீ. தொலை விலுள்ள முஸ்லிம்களே இல்லாத பகுதிக்கு அந்த அதிகாலை மூன்று மணி வேளையில் இவர்கள் செல்வதற்கான தேவை என்ன? 

நாவலப்பிட்டி செல்வதற்காக இப்ரா ஹீம் மௌலவியின் மகன் தனது   மகனை இரவில் அழைத்துச் சென்ற தாகக் கூறும் பிடிக்கப்பட்ட அஷ்பாக்கின் தந்தை, எனது மகன் வேறொருவரின் பைக்கை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றுள் ளார். கடுகண்ணாவ பிரதேசத் தில் வைத்து பைக்கை நிறுத்தச் சொல்லி           சிறிது தூரம் முன்னோக்கிச் செல்லுமாறு இப்ராஹிம் மௌலவியின் மகன் கூறி யுள்ளார். விளக்குகளை அணைத்து பைக்கை ஸ்டார்ட்டில் வைத்திருக்கு மாறும் அவர் கூறியுள்ளார். சில நேரங் களின் பின்னர் மக்கள் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்து எனது மகனைத் தாக்கியுள்ளனர். இப்ராஹிம் மௌலவி யின் மகன் ஓடிவிட்டார் என்று கூறு கிறார்.

இப்ராஹிம் மௌலவி ஜமாஅதே இஸ்லாமியைச் சேர்ந்தவர் என்ற நம்பிக் கையிலேயே எனது மகனை அவர்களு டைய வகுப்புக்களுக்கு அனுப்பி வைத் தோம். அவர் (இப்ராஹிம் மௌலவி) விலக்கப்பட்ட செய்தி எங்களுக்குத் தெரியாது என விளக்கமறியலில் இருக் கும் மற்றுமொருவரின் தந்தை கூறினார்.

ஜமாஅதே இஸ்லாமி பதிவு செய்யப் பட்டதொரு இயக்கம். அந்த இயக்கம் தொடர்பில் பிரச்சினைகள் கிடையாது. ஆனால் அதிலிருந்து விலக்கப்பட்டவர் களின் தீவிரவாதச் செயற்பாடுகள் பற்றியே நாம் பார்க்க வேண்டியுள்ளது என கேகாலை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) கமல் பெரேரா தெரிவித்ததை வைத்தும் தெல்கஹகொட பள்ளிவாசல் செயலா ளர் சொன்னதை வைத்தும் மக்களுடை யதும் கைதுசெய்யப்பட்டவர்களின் உற வினர்களதும் தகவல்களை வைத்தும் பார்க்கின்ற பொழுது ஜமாஅத்தே இஸ் லாமியுடனான உறவும் பிரச்சினைக் குரியதொன்றாக இருந்ததில்லை என்  பது தெளிவாகிறது.

அப்படியானால் இது ஒரு லோன்லி வொல்ப் தாக்குதல் முறையா? அப்படி இருக்க முடியாது என்கிறார் ஏஎஸ்பி கமல் பெரேரா. நிச்சயமாக இதற்கு     ஒரு நெட்வேர்க் இருக்கிறது. இங்கு மட்டுமன்றி பொதுஹர, கம்பளை, மன் னார் எனப் பல பிரதேசங்களிலும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ சின்னங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. மன்னார், திருகோணமலை, காத்தான்குடி என நாட்டின் பல பிரதேசங்களிலும் இவர் களுடன் தொடர்புடையவர்கள் இருக்கி றார்கள் என அவர் தெரிவித்தார்.

இவர்கள் தாமாக இங்கு இயங்க வில்லை. சர்வதேச அளவில் யாரோ இவர்களை இயக்குகிறார்கள். அவர்கள் ஐஎஸ் ஆகவும் இருக்கலாம். வேறு சர்வ தேச சக்திகளாகவும் இருக்கலாம். அந்தச் சக்திகளைத் தான் (ஏடிஞ்ட டச்ணஞீண்) நாங்கள் தேடத் தொடங்கியிருக்கிறோம் என அவர் கூறினார்.

தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதா எனக் கேட்டதற்கு, நாட்டிலிருந்து வெளியேற முடியாதபடி விமான நிலையத்துக்கு அறிவித்தல் கொடுத்திருக்கிறோம். கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கான அவகாசம் இல்லாமலில்லை என்று அவர் தெரிவித்ததைப் பார்த்தால், அவர் கள் வெளிநாடுகளில் கண்டு பிடிக்கப் படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுகி றது. இப்ராஹிம் மௌலவியின் மகன் ஏற்கனவே துருக்கி சென்று வந்திருப்ப தும் இந்த வாய்ப்புக்கு உரமூட்டுகிறது.

சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஎஸ் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்ட அபூ சுரையா சைலானி குடும்பத்துடன் மாயமாய் மறைந்தது போலவே இப் ராஹிம் மௌலவியின் மகன், தனது மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தையுடன் தலைமறைவாகியுள் ளார். அவரது இளைய மகனும் தற் பொழுது தலைமறைவாகியுள்ளதோடு, இப்ராஹிம் மௌலவியும் தனது நாவ லப்பிட்டி இல்லத்திலேயே தங்கியிருக் கிறார்.

இப்ராஹிம் நபி தனது தந்தை வணங் கிய சிலைகளைத் தகர்த்தது போலவே இப்ராஹிம் மௌலவியின் புதல்வர்கள் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தியிருக் கலாம் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. லாஇலாஹ இல்லல் லாஹ், அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளர்கள் இல்லை என்பதனால் புத்தர் சிலைகளைத் தாம் உடைத்ததாக இவர் கள் வாக்கு மூலம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.  ஆனால் கைதுசெய்யப்பட்டுள்ள ஏழு பேரும் சிலை உடைப்புடன் சம்பந்தப் பட்டவர்கள் அல்ல. சிலை உடைத்த தாகச் சொல்லப்படுபவர்களுடன் சம் பந்தப்பட்டவர்கள். ஆகவே இவர்கள் இப்படியான வாக்கு மூலம் வழங்கி யிருப்பார்களா என்ற சந்தேகத்தை ஏஎஸ்பி கமல் பெரேராவிடம் கேட்ட போது, இல்லை. அப்படியான வாக்கு மூலம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்கு மத ரீதியான தொடர்புகள் எதுவும் கிடையாது என அவர் கூறினார்.

ஊரில் சந்தேகப்படும் படியாகவும் இவர்கள் இல்லை. தீவிரவாதச் செயற் பாடுகளில் ஈடுபட்டதாகவும் எந்தத் தக வல்களும் இல்லை. இஸ்லாமிய இயக் கங்களுடனும் இவர்கள் இல்லை. தாக் குதல்கள் மத உணர்வு சம்பந்தப்பட்ட வையாகவும் இல்லை. அப்படியானால் இந்தத் தாக்குதல்களின் பின்னணி    என்ன? இந்தத் தாக்குதல்களால் இஸ் லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த நன்மையும் விளையப் போவதில்லை. தற்போதைய நிலையை விடவும் மோச மான நிலையில் முஸ்லிம்கள் பாதிக் கப்பட்ட போது கூட இவ்வாறானதொரு நிலைக்கு முஸ்லிம் இளைஞர்கள் தூண் டப்பட்டதில்லை. அப்படியானால் இப் போது இந்தத் தாக்குதல்கள் ஏன்? முஸ்லிம் சமூகத்தைப் பகடைக்காயாக வைத்து வேறு யாரும் காய் நகர்த்த முயற்சிக்கிறார்களா?

இவர்கள் தனியான குழுவாக இயங் கினார்களா என்ற கேள்வி இப்போது  பல தரப்பினாலும் எழுப்பப்படுகிறது.  இந்த இளைஞர்களுடைய நெட்வேர்க் தொடர்பில் விசாரித்த போது கணூணிஞூஞுண்ண்டிணி ணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt எணூணிதணீ (கஈஎ) என்ற பெயரில் இவர்கள் இயங்கியதாகத் தெரிய வந்தது. இது இவர்கள் ஊரில்  ஒரு குழுவாக இயங்குவதற்காக வைத் துக் கொண்ட பெயர் என்றும் இதற்குத் தேசிய அளவிலான நெட்வேர்க் இருப்ப தற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிய வந்தது.

இதற்கப்பால் தெல்கஹகொடயின் பிரபலமான கார்ல்டன் விளையாட்டுக் கழகத்தில் இப்ராஹிம் மௌலவியுடைய மகன் தான் செயலாளராக இருக்கிறார். இப்படிப் பல தொடர்புகள் இவர்களுக் கிடையில் இருந்த பொழுதிலும் சமய வகுப்புக்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஒரு மத ரீதியான பிரச்சினையை நாட்டிலே தூண்டுவதற்கான முயற்சி நடப்பதான சந்தேகத்தையும் பலரும் கிளப்புகின்றனர்.

முஸ்லிம்கள் மீதான திகன தாக்கு தல்கள் கட்டுமீறிச் சென்றது போல  புத்தர் சிலையை உடைத்ததால் ஏதும் பிரதி விளைவுகள் ஏற்படவில்லை என் பது மக்களுக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் உடனே கைதுசெய்யப்பட்டதனால் மக்கள் கொந் தளித்து எழுவதைத் தவிர்க்க முடிந்தது. திகனயில் இது தவறவிடப்பட்டது என உதவிப் பிரதேச செயலாளர் ரங்கன அத்தநாயக்க இது தொடர்பில் விபரித் தார்.

11 ஆம் திகதி வரை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான  நீதி மன்றத் தடையுத்தரவு விதிக்கப்பட்ட மையும் நிலைமையைக் கட்டுப்பாட் டில் கொண்டு வருவதற்கு உதவியது  என ஏஎஸ்பி கமல் பெரேராவும் தெரி வித்தார். இந்த வகையில் திகன சம்ப வத்தின் போது பிரதமரின் கையிலிருந்த சட்டம் ஒழுங்கை விடவும். மாவனல் லைச் சம்பவத்தில் ஜனாதிபதியின் கையிலிருந்த சட்டம் ஒழுங்கு சிறப் பாகச் செயல்பட்டிருக்கிறது. ஆச்சரியப் படத்தக்க வகையில் ஊடகங்களும் எதிர் பாராத விதமாக பொறுப்புடன் நடந்து கொண்டன. கடுகண்ணாவ பிரதேசத் தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பிடி பட்ட சிலை உடைப்புச் சம்பவம் தான் சிலை உடைப்புத் தொடரில் இறுதி யானது. அதற்கு முன்னர் நடந்த சிலை உடைப்புக்கள் தொடர்பிலும் ஊடகங் கள் மெத்தனமாகவே நடந்து கொண் டமை வியந்துரைக்கத்தக்கது. 

சிலையை தாக்கியதாகச் சந்தேகிக்கப் படுபவர் தப்பியோடிய பின்னர்,

சுத்தியல்கள் இரண்டும் மட்டும் அவருடைய வீட்டிலிருந்து கண்டுபிடிக் கப்பட்டது எப்படி? தனது பைக் காணாமல் போனதாக முறையிட்ட வரிடம் அதனுடைய லைசன்ஸ், இன் சூரன்ஸ் மட்டும் எப்படி இருக்க முடி யும் எனப் பல கேள்விகளை ஊரார் எழுப்புகின்றனர்.

மாவனல்லைச் சம்பவம் தொடர்பான உண்மை நிலவரங்கள் தலைமறை வாகியுள்ள இப்ராஹிம் மௌலவியின் புதல்வர்கள் கண்டுபிடிக்கப்பட்டா லேயே துலாம்பரமாகும். ஆனால் அவர் கள் ஏன் தலைமறைவாகியிருக்கிறார்  கள் என்பது தான் எல்லோர் முன்னிலை யிலும் உள்ள கேள்வி. 

கடைசியாக இப்ராஹிம் மௌலவி யுடைய வீட்டுக்குச் சென்றோம். பொலிஸ் அதிகாரிகள் இருவர் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட் டிருந்தனர். இந்த வீட்டுக்கு ஏன் பாது காப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று கேட்டோம். அவர்களுடைய உடைமை களைப் பாதுகாக்கவே நாங்கள் பாது காப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கி றோம் என்றார் கடமையிலிருந்த அதி காரி. திரும்பினோம், சிலைகளுக்கும்           சிலைகளை உடைத்தவர்களுக்கும் வழங் கப்படும் பாதுகாப்பினை மீட்டிப் பார்த்த வர்களாக.

களத்தில் உதவிய ரிகாஸ்  ஸுபைருக்கு நன்றிகள்

(மீள்பார்வை)

5 comments:

  1. A lot of puzzles are there in this case... Who are behind this? why peaceful Muslim community is targeted in this way? is it politics or religion that play a role? is it a conspiracy? is it a political game to change mindset of people to get votes.. Why is this? So many questions come into minds...

    ReplyDelete
  2. Is there a possibility that two sons of Ibrahim maulavi have been kidnapped to keep the story going? Also there is a possibility that the arrested suspects may be under threat to not to speak the truth, keeping their friends as ransom. I strongly feel a social movement should start working on this line as well.

    ReplyDelete
  3. I feel that this is a big game to intimidate some radical groups. to tell them not dare to play around.. Now radicalism a joke. terrorism is another joke. UN is still finds it hard to define terrorism.. why is it?because it a game between some developed nation. They can invade a country in the name of terrorism, for terrorism accusation... Now it is a joke..Do we need such a dirty trick. I do not think that majority of Sinhalese will support such thing now. They are sincere people .. they do not like crafty human dealing like this.

    ReplyDelete
  4. This is terrorism, who ever did it.No different to the attack of Dalada Maligawa by LTTE.Their good conduct and behaviour is no reason to claim they are framed or innocent.If they are conducting a class and visiting abroad,no doubt that they having some connection with those who want big trouble in Srilanka against Muslims.for that they may getting big money for that.

    If they are innocent,why they running and hiding? it shows that they did it purposely.Last year the digana incident happened before March,which is the month Geneva convention for human right violation take place.Now it is only two month away. So before that they need all out war(riot)against Muslims.Then they could show the world that Minorities are under attack.Other hand they want to teach a lesson to
    the Muslims to revenge the UN defeat in 2010.

    Last year they hired Sinhala extremist to attack Masjid expecting Muslims reaction.But Muslims did not played to their hand.This year they may hired Muslim extremist to attack Buddhist temple and statues,expecting Buddhist backlash.Now three terrorist group together wants to escalate the problem. These all working for money. Now it became as kudu business most lucrative way of quick money.So these buggers must be punished severely.

    ReplyDelete
  5. இவ்வாறான ஒரு சம்பவம் எங்கு நடந்தாலும் முதலில் எமது முஸ்லிம் சகோதரர்களே எந்தவித ஆதாரமும் அற்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி எமது அப்பாவி சகோதரர்களை காட்டிக்கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டு பெரும்பான்மை சமூகத்தினருக்கு தேவையான பொய்ன்ஸ்களை கொடுக்கும் வேலையை நன்றாகவே செய்கிறார்கள். கேட்டால் நல்லிணக்கம் என்பார்கள். இதில் அரசியல்வாதிகளும் மவ்லவிமார்களும் முப்திளும் கூட ஈடுபடுகின்றனர். ஒரு நாள் இதே முப்திளும் மவ்லவிகளும் சமூகத்தை காட்டிகொடுத்து வயிறு நிறப்பும் அரசியல்வாதிகளுமே வலளயும் துவக்குகளையும் பெரும்பான்மை சமுதாயத்தின் கையில் கொடுத்து எமது அப்பாவி முஸ்லிம்களையே கொலை செய்ய துணை போவார்கள். கேட்டால் அதுவும் நல்லிணக்கம் என்றே சொலலுவார்கள் மார்க்கத்தையும் விற்று எமது சகோதரர்களையே கொலை செய்கிற நல்லிணக்கம் எமக்கு தேவை இல்லை .

    ReplyDelete

Powered by Blogger.