Header Ads



ஞானசாரர் விடுதலை, செய்யப்படுவது ஏன் தெரியுமா..?

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த ஆகியோரும் வெவ்வேறாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை குறித்து கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஞானசார தேரரை விடுதலை செய்வதில் அரசியல் நோக்கம் காணப்படுவதாக மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று வர இருக்கும் நிலையில், சிறுபான்மை முஸ்லிம்களினதும், சிறுபான்மை கிறிஸ்தவர்களினதும் வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவை விட்டும் திருப்பும் நோக்கில் இவர் விடுதலை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

Dc

2 comments:

  1. அவருக்கு பொது மன்னிப்பு வழங்கும் அளவுக்கு அவர் என்ன பெரிய சாதனை செய்திருக்கிறார் ?

    அவர் குற்றவாளி என்று தானே சிறையில் அடைக்கப்பட்டார் !

    ReplyDelete
  2. இந்த தேரரை விடுதலை செய்தல் முஸ்லிம்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ பிரச்சினை இல்லை
    உண்மையில் உலகத்துக்கு சொல்லப்போகும் செய்தி என்ன என்றால் இலங்கையில் நீதித்துறை அவ்வளவு உறுதியாக இல்லை நீதிமன்றங்களின் தீர்ப்பை அரசியல் வாதிகளாலும் ஏனையவர்களாலும் கட்டுப்படுத்த முடியும் என்கின்ற செய்தியே சொல்லப்படுகின்றது இது மட்டும் அல்ல இன்னொரு செய்தி என்ன என்றால் நீதி எல்லாருக்கும் சமன் இல்லை என்பதாகும் நான் என் அப்படி ஒரு கருத்தை சொல்லுகிறேன் என்றால் எனக்கு நினைவில் வருகிறது ஒரு செய்தி, ஒரு தமிழ் சகோதரர் எது ஒரு சிறு காரணத்துக்காக சிறை தண்டனை கொடுக்கப்பட்டார் அவர் எந்த இடம் என்று சரியாக நினைவில் இல்லை, அவருக்கு இரண்டு குழந்தைகள் அக் குழந்தைகளின் தாய் இறந்து விட்டால் அவர்கள் அனாதை ஆகி விட்டார்கள் அக்குழந்தைகள் தனது தந்தையை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கேட்டு கொண்டார்கள் அது மட்டுமல்லாது மற்றவர்களும் மன்னிப்பு வழங்குமாறு பரிந்துரை செய்தார்கள் அனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை உண்மையில் அவருக்கு மனிதாபிமான அடிப்படையிலும் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி எதிர் காலம் ஆகிய வற்றை கருத்தில் கொண்டும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவது கருத்தில் கொள்ளப்பட வெண்டிய விடயம்

    இந்த தேரரை விடுதலை செயவதால் இனவாத செயட்பாடுகளும் இன ஐக்கியத்துக்கான பரிசோதனைகளும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கூட போகின்றன என்பது மட்டுமே உண்மையாகும்।

    ReplyDelete

Powered by Blogger.