Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய, போட்டியிடுவது உறுதியானது

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு அறிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே மக்கள் தயார் என்றால் தான் தயார் எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் கோத்தபாய ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

தனது அமெரிக்க குடியுரிமை தொடர்பாக இருந்து வந்த சிக்கலான நிலைமை தற்போது ஓரளவு முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஆரம்பத்திலேயே கூறியுள்ளதால், அவர் தொடர்பிலும் பிரச்சினை ஏற்படாது எனவும் கோத்தபாய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

4 comments:

  1. Good News for UNP, bad news for My3......

    ReplyDelete
  2. Yes insha allah we will with you sir😊😊😊😊😊😊😊😊😊

    ReplyDelete
  3. u.n.p too bad news anura kumara of j.v.p also participating in this contest

    ReplyDelete
  4. We will support to you sir i am mohammed

    ReplyDelete

Powered by Blogger.