Header Ads



இணைந்த வடக்கு - கிழக்கில் சமஷ்டிக்கு, நடவடிக்கை எடுக்கவேண்டும்

முதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முறையாக சிறந்த கல்விப் புலமையும் இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் அறிவும் கொண்ட கலாநிதி சுரேன் ராகவனை நியமித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரை சரியான முறையில், ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

6 comments:

  1. அதட்கு உருப்படியா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க. வாயால பீதினத்த தவிற. ஒற்றுமையா கூட இருக்க தெரியாத உங்களுக்க்கு உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது அக்கறை உண்டோ.

    ReplyDelete
  2. செருப்பு இருக்கு வேண்டுமெண்டால் தலையில் அடித்துக்கொள்ள

    ReplyDelete
  3. ஒங்கட சமஸ்டிட செப்பம் கிரன்ல வெளங்குது இவாத கும்பல் கொடுத்தத் தெரியும் குரங்குகள்ற கையில பூமாலைய

    ReplyDelete
  4. ஒங்கட சமஸ்டிட செப்பம் கிரன்ல வெளங்குது இவாத கும்பல் கொடுத்தத் தெரியும் குரங்குகள்ற கையில பூமாலைய

    ReplyDelete
  5. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களே முஸ்லிம் மக்கள் உங்களைப் பெரிதும் மதிக்கின்றார்கள். நீங்கள் நல்லவர் வல்லவர் என்று (அப்படி வச்சுக் கொள்வோம்) இந்த இணைப்புக் கதை சமஸ்டிக் கதை எல்லாம் வேணாமுங்க சேர். தமிழர்கள் முஸ்லிம்களுக்குச் செய்த செய்யும் செய்யத் திட்டமிட்டிருக்கும் அடாவடித்தனங்களை புறந் தள்ளிப் போட்டு முஸ்லிம்கள் “ஓம்" சொன்னால்க்கூட சிங்களவர் இணைப்புக்கு “ஓம்" சொல்வார்களா. இதுக்கு சிங்கள அரசியல் தலைவர்கள் ஏதோ “ஓம்" சொன்னாலும் சொன்னவர் திரும்பி ஆட்சிக்கு வருவதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா. உங்களுடைய ஒரு வாக்கு என்ன 40 இலட்சம் வாக்குகளுக்கு சமமா? நடக்கக்கூடிய சாத்தியமான விடயங்களைப்பற்றி பேசுங்க சேர். எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  6. கதிர்காமர் என்று ஒருவர் இருந்தார்....

    ReplyDelete

Powered by Blogger.