Header Ads



கோத்தபாய மீது, எமக்கு பயம் உள்ளது - ரஞ்சன் ராமநாயக்க

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புனர்வாழ்வு பயிற்சி பெற்றால் ஆராய்ந்து பார்க்க சந்தர்ப்பம் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி - உங்களுக்கு கோத்தாபாய மீது பயம் உள்ளதா?.

பதில் - பயங்கரமான மனுஷன் தம்பி. கௌதம புத்த பகவானை மக்கள் வழிபடுகின்றனர். அவரால் தொந்தரவுகளோ துயரங்களோ இல்லை. ஆனால் அங்குலிமாலவை பார்த்தால் நாங்கள் பயந்து ஓடுவோம்.

சில கொடூரமான மனிதர்களை கண்டால் நாங்கள் பயந்து ஓடிவிடுவோம். கோத்தபாயவை கண்டால் மக்களுக்கு பயம். வெள்ளை வான் கலாசாரம் இருக்கின்றது. லசந்த விக்ரமதுங்கவை கொன்றது யார் என்று தெரியும்.

இதனால், கோத்தபாய மீது எமக்கு பயம் உள்ளது. எனது மாமனார் விஜயகுமாரதுங்கவை கண்டு எவரும் பயப்பட மாட்டார்கள்.

கோத்தபாய புனர்வாழ்வு பயிற்சி பெற்ற நாம் ஆராய்ந்து பார்க்கலாம். அமெரிக்கா குடியுரிமையை இரத்துச் செய்வீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்கும் போது கோத்தபாய பயங்கரமாக சிரிக்கின்றார்.

ஒரு விதமாக பார்க்கின்றார். அவர் மனிதாபிமான அல்ல. சற்று பிசகினால் அவ்வளவுதான்” என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.