Header Ads



தூபி மீதேறிய 7 மாணவர்களுக்கும், பெப்ரவரி 5 வரை விளக்கமறியல்

நேற்று கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர் 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.