இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை, ஆரம்பிக்கும் நகர்வுகள் தெரிகின்றது - விமல் வீரவன்ச
பாராளுமன்றத்தில் இன்று -23- புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி அண்மையில் மாவனல்ல மற்றும் புத்தல் பகுதியில் ஆயுத மீட்பு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்,
அதன்போது :-
அண்மையில் மாவனல்லை சிலை உடைப்பு சம்பவம் குறித்து அப் பகுதியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் தந்தையர்களின் வீடுகளில் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் ஏனைய சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் புத்தளம் பகுதியில் ஒரு காணியில் பெருமளவிலான ஆயுதங்கள் கண்டறியப்பட்டது.
இந்த செயற்பாடுகள் சில சர்வதேச நாடுகளின், சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கபடுகின்றமை இதன் மூலமாக தெரிகின்றது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும். இந்த சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை தகவல்களை சபைக்கு அறியத்தர வேண்டும். இந்த நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அமைதியாக இந்த நாட்டில் வாழ விரும்புகின்றனர். அவ்வாறு இருக்கையில் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களையே பாதிக்கும் வகையில் அமையும், ஆகவே அரசாங்கம் இது குறித்து எமக்கு அறியத்தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இவன் ஒரு தேசத்துரோகி. இவனுக்கு தேவையானதே நாட்டில் அமைதியின்மையே. அப்போது தான் இவனுக்கு குளிர் காய முடியும் . அதனால்தான் இல்லாததையெல்லாம் உழரி நாட்டில் எப்போதும் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறான்.
ReplyDeleteகிழக்கு மாகாணத்தில் ISIS வளர்ச்சியடைந்து வருவதை 2017யிலேயே RAW, CIA என்பன கண்டுபிடித்து இலங்கை அரசுக்கு அறிக்கை கொடுத்துவிட்டது, ஒருவரும் நம்பவில்லை. இப்போ தான் இந்த முட்டாள் அரசியல்வாதிகள் உண்மையை உணரத்தொடங்கி விட்டார்கள்.
ReplyDeleteEveryone agree Weerawansa extremely communnaslist from his political career.Certain political leaders using him to escape themselves for their communal acts
ReplyDeleteKeeping apart these political situation we Muslims leaders all concerned should give their attention Mawanella Puttalam incidence s as its a grave problem we are facing
We have done a great damages for coexistence
Politicians like Weerawansa may use this opportunity
We dont want to blame them having done a serious problem creating this situation.