மாவனல்லையில் குழப்பங்களை, ஏற்படுத்த திட்டம் - பாராளுமன்றத்தில் எச்சரிக்கை
மாவனல்லை மற்றும் புத்தளம் பகுதியில் ஆயுதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்துக்கொண்டு பெளத்த காவி வாதிகள் சிலரும் அவர்களுடன் இணைந்த அமைப்பினர் சிலரும் மாவனல்லை பிரதேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரச தரப்பினர் இன்று -23- சபையில் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் இந்த நாட்டினை தீ வைக்கும் நோக்கத்தில் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது எனவும் அரச தரப்பினர் சபையில் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி அண்மையில் மாவனல்ல மற்றும் புத்தல் பகுதியில் ஆயுத மீட்பு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்,
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல:- முறையான விசாரணைகளை முன்னெடுத்த காரணத்தினால் தான் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளது. விமல் வீரவன்சவின் கேள்வியிலேயே எமது விசாரணை சரியாக இடம்பெற்று வருகின்றது என்பது உறுதியாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

Post a Comment