Header Ads



முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு, நாளைமுதல் உத்தியோகபூர்வ சீருடை

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாளை (21) முதல் உத்தியோகபூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, தேசிய வீதி பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

சில முச்சக்கரவண்டி சாரதிகள், நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து பயணிப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில், தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு முச்சக்கரவண்டி சாரதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைக்கு சில முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.

2 comments:

  1. நல்லமுன்னேற்றமாக ஏற்பாடு, எல்லா முச்சக்கரவண்டிக்காரன்களும் சீருடை அணிந்தால் அவர்களால் வரும் எல்லா விபத்துகளும் அதன்விளைவான அகால மரணங்களும் உடன் அடங்கிவிடும். தலைவலிக்கு தலையணை மாற்றும் நல்லாட்சியின் மற்றுமொரு துணிகர முயற்சி.

    ReplyDelete
  2. முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் விரும்பாத சட்டங்களாக சட்டை போடுவடுவது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது, இலங்கை கோர்பரேட்களின் சதிகளில் ஒன்று, தங்களுடைய ஃபெக்டரிகளில், கட்டடவேலைத்தளங்களில் வேலைசெய்ய ஆட்கள் இல்லை அதனால் வருபவர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள், ஓ.எல், ஏ.எல் முடித்தவர்கள் முச்சக்கரவண்டிகளை எடுத்துக்கொண்டு சுயதொழிலில் ஈடுபட முதலாளிகளுக்கு தின்டாட்டம், இதனை முறியடிக்க பல திட்டங்கள்
    1. முச்சக்கர வண்டிகள் நகரை அழகைக்குறைவு செய்கிறது என்று அதன் இறக்குமதியை நிறுத்த முயற்சி
    2. விலை அதிகரிப்பு
    3. முச்சக்கரவண்டி சாரதிகள் 30 வயதிற்கு குறைந்தவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி (டிமோ மோட்டர்ஸ் )
    4. 35 வயதிற்கு குறைந்தவர்களுக்கு ஆட்டோ லைசன்ஸ் ரத்து
    5. இப்போது சீருடை

    அரசு மக்களுக்கானது என நினைத்தால் எல்லாருக்கும் நாமம், பட்டை தான்

    ReplyDelete

Powered by Blogger.