Header Ads



அஸாத் சாலி பதவியில் நீடிப்பாரா..? சு.க. முட்டாள்கள் அல்ல என்கிறார் முதலமைச்சர்

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பார்களென மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.

எனினும் ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் முட்டாள்கள் இல்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய முன்னர் தெரிவித்திருந்ததுடன், அஸாத் சாலியை ஆளுநராக நியமித்தவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும் அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையை முன்வைத்தவரே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தான் என மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னரே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

1 comment:

  1. மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றைய தினம் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    மேல் மாகாணசபையின் அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில், அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    மேல் மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

    நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை ஆளுநர் பதவியில் அமர்த்தியதன் மூலம் மேல் மாகாணத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது என அவர் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    இன்றைய தினம் நடைபெறவுள்ள மாகாணசபை உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மாகாணசபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை உள்ளடக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.
    Courtesy - tamilwin.com
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.