Header Ads



இலங்கையில் தூக்குத்தண்டனை, நிறைவேற்றப்படவுள்ள 2 பேர்

போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் பெயர் விவரம் குறித்தும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுகுறித்த ஆவணங்களை, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஜனாதிபதியின் திட்டப்படி மரணதண்டனையை நிறைவேற்று மாறு நீதிமன்றப் பணிப்புரையின் பேரில் காத்துநிற்கும் 18 பேரின் தனிப்பட்ட கோவைகளை உடனடியாகத் தயாரித்து தனக்கு அனுப்பிவைக்குமாறு சென்ற 6 மாதங்களுக்கு முன் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார், ஆனால் சென்ற வாரம் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் அத்தனை சுயகோவைகளும் காணாமல் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.ஆனால் இரு தினங்களின் பின் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் அந்த விபரங்கள் சிறைச்சாலை அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இப்போது ஜனாதிபதி எங்கே இருக்கின் றார்.அவருடைய சொந்த நிகழ்ச்சிநிரலை மக்களுக்குக் கூறி இந்த நாட்டுமக்களைத் திசைதிருப்ப முயற்சி செய்கின்றாரா? அல்லது அவருக்குப்பின்னால் வேறு சக்திகள் இயங்குகின்ற னரா என பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர்,அல்லது பின்னால் உள்ள சக்திகள் ஜனாதிபதியை இயக்குகின்றதா? என கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கடைசியாக அந்த 18 பேரின் விபரங்கள் எதுவுமின்றி போதைப்பொருள் தொடர்பான 2 பேரை தூக்கிலிடத் தயாராகுகின்றனர். தான் போதைப் பொருள் பாவ னை, போதை கடத்தலுக்கு மிகப் பெரிய எதிரி என காட்டமுற்பட்டு அதைத் தடுக்கத் தெரியாது, பிலிப்பை ன்ஸ், சிங்கப்பூரின் உதவியை கேட்கின்றார். இவர் யாரை ஏமாற்றுகின்றார் என்பது நிச்சியம் அவருக்கு விளங்குவதில் லை. ஆனால் இந்த நாட்டுமக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வாழமுடியாது என்பதை பதவி,அதிகார மமதையில் பேசும் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.