Header Ads



புதிய அரபு கல்லூரிகளை நிறுவ, தடை விதிக்கப்படும்

நாட்டில் புதி­தாக அர­புக்­கல்­லூ­ரிகள் நிறு­வப்­ப­டு­வதைத் தடை­செய்­வ­தற்கும், தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் அர­புக்­கல்­லூ­ரிகள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ்ப் பதிவு செய்து அவற்றைக் கண்­கா­ணிப்­ப­தற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார  அமைச்சர் தீர்­மா­னித்­துள்ளார். அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் ஆகி­யோ­ருக்கு வழங்­கி­யுள்ளார்.

நாட்­டி­லுள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் அமைச்சர் ஹலீம் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டில் சுமார் 300 அர­புக்­கல்­லூ­ரிகள் இயங்கி வரு­கின்­றன. இவற்றில் பல, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­ட­தாக இல்லை. திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்­டுள்ள அர­புக்­கல்­லூ­ரி­களும் ஒழுங்­காக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவற்றின் செயற்­பா­டுகள் பற்றி அறிந்து கொள்ள முடி­யா­துள்­ளது.

திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள மற்றும் பதிவு செய்­யப்­ப­டாத அநேக அர­புக்­கல்­லூ­ரிகள் வெளி­நா­டு­களில் இருந்து நிதி­யு­த­வி­களைப் பெற்று வரு­கின்­றன. அந்­நிதி எவ்­வாறு செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது என்றும் அறிய முடி­யா­துள்­ளது. அதனால் புதி­தாக அர­புக்­கல்­லூ­ரிகள் ஸ்தாபிக்­கப்­ப­டு­வது நிறுத்­தப்­படும். தற்­போ­துள்ள அர­புக்­கல்­லூ­ரிகள் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

இன்­றைய சூழ்­நிலையில் அர­புக்­கல்­லூ­ரிகள் சில­வற்றின் மீது ஏனைய சமூகம் சந்­தேகம் கொண்­டுள்­ளது. முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­றுள்­ள­வர்கள், தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­ன­வர்கள், இஸ்லாம் நல்­லி­ணக்­கத்­தையும், நல்­லு­ற­வை­யுமே வலி­யு­றுத்­து­கி­றது என்­பதை நாம் நிரூ­பிக்க வேண்டும்.

அர­புக்­கல்­லூ­ரி­களை வக்பு சபையின் கீழ் பதிவு செய்­வதன் மூலம் அவற்றை கண்­கா­ணித்து அபி­வி­ருத்தி செய்­ய முடியும் என்றார்.

இதே­வேளை, இலங்கை அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­யத்தின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.எம்.ஜவுபர் கருத்து தெரி­விக்­கையில் இலங்கை அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­யத்தில் 217 அர­புக்­கல்­லூ­ரிகள் பதிவு செய்து கொண்­டுள்­ளன. மேலும் 10 அர­புக்­கல்­லூ­ரிகள் பதி­வுக்­காக விண்­ணப்­பித்­துள்­ளன.

அமைச்சர் ஹலீம் எடுத்­துள்ள தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­தாகும். தற்­போது இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரி­களை முன்­னேற்­று­வ­தற்கு அர­சாங்கம் திட்­டங்­களை வகுத்து உதவி செய்ய வேண்டும் என்றார். வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசின் கருத்து தெரிவிக்கையில் வக்பு சபையில் அரபு கல்லூரிகளை பதிவு செய்ய அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும்.  இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வக்பு சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் என்றார். 

(ஏ.ஆர்.ஏ. பரீல்)

5 comments:

  1. It is quality what matters not quantity. poor Minister and Muslim community in SL struggle to upgrade and update Arabic college system.

    ReplyDelete
  2. Hope this man will arrange salary for all staff.. running cost from government..

    Do not compromise our rights... by saying no more arabic colleges. Rather creat a mechanism to help them financially by your ministry and do monitor them too. Also teach high officials to learn Tawheed and how to stay away from Shirk.

    ReplyDelete
  3. ஓர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அரபு மொழி  இலங்கை முஸ்லிம்களினதும் தாய் மொழியாக மாற்றப்படல் வேண்டும்.

    நாம் தினமும் தொழுகையில் அரபியில் ஒதுவதனையும், புனித குர்ஆனிலிருந்து ஒதுவதனையும் பொருள் அறிந்து ஓதி,  அதன் கருத்துக்களுடன் இரண்டறக் கலந்து  அவற்றின் உச்ச பலனை அடைய அரபு மொழியை அறிந்திருப்பது முஸ்லிம்களுக்கு எத்துணை அவசியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

    இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அரேபியாவில் மட்டும் பேசப்பட்ட அம்மொழி அங்கிருந்து செங்கடலையும் தாண்டி வட ஆபிரிக்கவிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி அட்லான்டிக் சமுத்திரம் வரை வியாபித்திருப்பதற்கு, நம் முன்னோர் புனித குர்ஆன் இறக்கப்பட்ட மொழிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

    ஆகவே, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும், அரபுக் கல்லூரிகளும் இது விடயத்தில் இணைந்து ஓர் செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவார்களாக..

    ReplyDelete
  4. மதரஸாக்கள் சம்பந்தமாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வழங்க குறைபாட்டாலும் ஏனைய பிரச்சனைகளினாலும் மதரசாக்கள் மூடப்பட்டு விட்டால் விரல்விட்டு எண்ணக்கூடிய மதரசாக்களை மீதமாகும் இவ்வாறான ஒரு நிலையில் மீண்டும் புதிய மதரசாக்களை ஆரம்பிப்பதற்கான ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டாலும் கூட அது தோல்வியடையும் சாத்தியக்கூறுகளே அதிகம் எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான மதரசாக்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டு அதனை திறம்பட நடத்துவது சாலச்சிறந்தது

    ReplyDelete

Powered by Blogger.