Header Ads



ரயிலிருந்து விலகி ஓடிய, 2 ரயில் பெட்டிகள் - வவுனியாவிலிருந்து, கொழும்பு வரும்போது அதிர்ச்சி

வவுனியாவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலொன்றின் இரு பெட்டிகள் இன்று -23- காலை விலகிச் சென்றுள்ளது. 

தலாவ - சவஸ்திபுர ஆகிய பகுதிகளுக்கிடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் சம்பவத்தில் மேற்படி ரயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளுக்கும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.