Header Ads



வீதியில் வீசப்பட்டிருந்த 2 மாத சிசு மீட்பு (படம்)


வீதி மருங்கில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாத வயதுடைய பெண் சிசுவொன்றை மீட்டெடுத்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து, கிரான் முருகன் கோவில் வீதிக்குச் சென்றபோது அங்கு வீசப்பட்டுக் கிடந்த சிசுவைத் தாம் மீட்டெடுத்து உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்றிரவு (20) 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இச்சிசு வீசப்பட்டிருக்கலாம் என விசாரணைகளின்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.