Header Ads



ரணிலின் அனுமதியுடனே, கலந்து கொண்டேன் - வசந்த

அத்துரலிய ரத்ன தேரரின் விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடனேயே கலந்துகொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று -02- கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் காரணமாக அவருக்கு அதற்கு செல்ல முடியாமல் போனது.

தான் மீண்டும் கட்சியிலிருந்து செல்ல மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரத்ன தேரரின் விகாரையில் நடைபெற்ற நிகழ்வில், பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, உதய கம்மம்பில போன்ற அரசாங்க தரப்பினருடன் இருக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. மீண்டும் இவர் கட்சி மாறிவிட்டாரா? என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்திருந்தன. இது குறித்து ஊடகவியலாளர்களிடம் விளக்கமளிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

dc

No comments

Powered by Blogger.