யாழ்ப்பாணம் புதிய சோனகர்தெரு, பகுதியில் வெள்ள பாதிப்பு - பாதிக்கப்பட்ட மக்கள் கவலை
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 புதிய சோனகர் தெரு(பொம்மைவெளி) 2ம் குறுக்குத்தெரு பகுதியில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள இவ் வெள்ளநீர் வடிந்து ஓடாமல் நிற்பதனால் இப்பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப்பகுதிக்கு அண்மையில் சென்ற யாழ் மாநகர முதல்வர் மற்றும் வட்டார உறுப்பினர்கள் எவரும் இவ்விடயம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்



முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற முஸ்லிம்களின் விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்
ReplyDelete