Header Ads



மைத்திரியை அழிப்பதற்கு ரணில் செய்த, எந்த செயலாக இருந்தாலும் பகிரங்கப்படுத்த கோரிக்கை

அரசியல் ரீதியாக முற்றாக அழித்து முடிவை காண வேண்டிய நபரை ஓரளவுக்கு அழித்து இருப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை மீது தனக்கும் பாரதூரமான கருத்து முரண்பாடு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் அழிவை பற்றி பேசும் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை பொறுபேற்ற பின்னர், அந்த கட்சியை வளர்த்து ஜெலிக்க மிகப் பெரிய கட்சியாக மாற்றியுள்ளாரா எனவும் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி அழிப்பதற்கு செய்த எந்த செயலாக இருந்தாலும் அதனை பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிரேஷ்ட தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் முழு இலங்கையிலும் ஆறு ஆசனங்களை கைப்பற்றும் போது யார் கட்சியை அழித்தார் என்பது முழு உலகத்திற்கும் ஒப்புவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, ஐக்கிய சேதியக்கட்சியின் தலைமை மற்றும் கட்சி மீது சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் எதிர்காலத்தில் பதிலளிக்கப்படும் எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.